சோழவந்தான் :
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
விக்கிரமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் வடகாடுபட்டி பகுதியில் சாலை அமைக்காமல் பல வருடங்களாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும், இது குறித்து, அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ,கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டு விரைவில் சாலை அமைத்து தரப்படும் என, உறுதி அளித்து சென்றனர் .
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை இதன் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் .பொது மக்களின் நலன் கருதி உடனடியாக சாலை அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மோசமான சாலையால் விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.