சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற கிராமப் பகுதிகளில் நெல் நெல் கொள்முதல் நிலையங்களை பாதியிலேயே மாவட்ட நிர்வாகம் மூடியதால் கொள்முதல் நிலையங்களில் மூடைகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.
மேலும் நனைந்த மூட்டைகளில் நெல் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்தும் பணிகளில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களை எடுத்தவர்கள் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் விட்டு விட்டதாக பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் 5000 முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொள்முதல் நிலையங்களை அறுவடை முடியும் வரை நீடிக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.