Close
செப்டம்பர் 20, 2024 12:38 காலை

கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

புதுக்கோட்டை

கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் நியாஸ்அகமது தலைமை வகித்தார்.  புதுக்கோட்டை நகர செயலாளர் எஸ்.கே. ராஜா, கந்தர்வகோட்டை தொகுதி செயலாளர் முருகானந்தம் கலையரசன், ஆர்.ஜே.ராஜா, ஜின்னா, பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்: 8 கோடி தமிழக மக்களின் வாழ்வியலின் நீதியை காற்றில் பறக்கவிட்டு விட்டு அணைக்கட்ட  நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு  ஒன்றிய அரசு துணை போகக்கூடாது.

காவிரி நடுவர் மன்றம்  மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை எனும் நீதியை வழங்கிய பின்பும் அணைக்கட்ட ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசின் முதல்வரும். நீர்வளத்துறை அமைச்சரும் பேசுவது போதாதென்று. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் அணை கட்ட ஆதரவாக பேசுவது என்பது 8 கோடி தமிழர்களின் உள்ளத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறந்தள்ளி,  தமிழகத்தை பாலைவனமாக மாற்ற நினைக்கும் ஒன்றிய மற்றும் கர்நாடக அரசுகளை தட்டிக் கேட்டு கண்டித்தோம். அணை கட்டும் முயற்சியைக் கைவிடும் வரை இனியும் கண்டிப்போம்.

சம்மட்டி பதித்த புகைப்படம் ஏந்தி கர்நாடக அரசுக்கு அனுப்ப முயன்றபோது  காவல்துறை தடுத்து நிறுத்தியதால் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து நாங்கள் என்ன இந்தியரா இல்லை நாங்கள் அந்நியரா என்று முழக்கமிட்ட பின்னர் கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top