Close
நவம்பர் 24, 2024 7:10 மணி

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சாவூர்

தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த ம. நடராஜன் குறித்த நூல் வெளியீட்டு விழா

தஞ்சை அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா  நடைபெற்றது.

தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போராளி மறைந்த  ம. நடராஜன்  நினைவலைகள் பகிர்தல் என்னும் நூல் அறிமுக விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் முனைவர் வி. பாரி தலைமை வகித்தார்.விளார் சாமிநாதன், தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் சி.முருகேசன், பொறியாளர் ஜான் கென்னடி, சமவெளி விவசாயிகளாக இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று  நூலைப் பற்றியும், நடராஜனின் சிறப்பம்களை நினைவுகூர்ந்து பேசினார்.  மதுரை வழக்கறிஞர் பெ.கனகவேல் நூலை அறிமுகம் செய்து வைத்தார்.தஞ்சை மார்க்க சகாயம், கோவிந்தராஜன், இடையூர் ராவுத்தசாமி, சங்கந்தி வெங்கட்ராமன், தஞ்சை தமிழன்பன் ,மண்ணை கல்யாணசுந்தரம், பாலசுப்ரமணியன், திருச்சி பக்கிரிசாமி உள்ளிட்டோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக வழக்கறிஞர் பானுமதி வரவேற்புரையாற்றினார். நூலாசிரியர் ஆத்மநாதன் ஏற்புரை ஆற்றினார். வழக்கறிஞர் லியோபொட்டு மணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top