Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: குறைந்த அளவே பேருந்துகள் இயங்கியதால் மக்கள் அவதி

தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பேருந்துவசதியின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது

அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்த போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 சதவீதத் திற்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமை யான பாதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை போக்குவரத்துக்கழக கோட்டம் மூலம்  புற நகர் மற்றும் நகர் பேருந்துகள் என சுமார் 403 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நகர் பேருந்துகள் 150 க்கும் மேல் கிராமங்களுக்கு இயங்கப்படுகின்றன. இதன் மூலம்தான் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கும்,  படிப்ப தற்காக பள்ளி கல்லூரிகளுக்கும் ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில்,  மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இரு நாள்களுக்கு அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தபடி நடைபெறுகிறது. ஆனால், மாநில அரசு ஒரு புறம் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆதரிப்பதாக கூறியது. மறுபுறம்   அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்தது. அதே போல தமிழக அரசின் தலைமைச்செயலாளரும் வேலைக்கு வராவிட்டால் ஊதியப்பிடித்தம் செய்யப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், அரசின் அறிவிப்புகளை நம்பி வழக்கம் போல பொதுமக்களும், மாணவர்களும் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். ஆனால் ஒரு சில பேருந்துகள்தான் இயங்கின. அதில் கூடுதலாக ஏறி நெரிசலுடன் சிரமத்துடன் பயணித்து போகுமிடங்களுக்கு சென்று சேர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்படும் 12 அம்ச கோரிக்கைகள்:

1. தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA – Essential Defence Services Act) ரத்து செய்ய வேண்டும்.

2. வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கை களையும் நிறைவேற்ற வேண்டும்.

3. எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

4. அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள், மதிய உணவு ஊழியர் களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

5. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவரவேண்டும்.

6. வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளிக்க வேண்டும்.

7. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும்.

8. கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்க வேண்டும்.

9. வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக் காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்க வேண்டும்.

10. பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

11. ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

12. தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய்து செய்து. அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும்

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 5,195 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் வேலைநிறுத்தம் காரணமாக 31.88% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும்  போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top