ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.
குக்கிராமங்களைப் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஊரகப் பகுதிகளில் 1261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், 381.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இலட்சம் பனை விதைகள் மற்றும் 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.