Close
நவம்பர் 22, 2024 7:46 காலை

புதுக்கோட்டையில் மண்பாண்டம் தொழில் மற்றும் மின்திருவை பயன்பாடு பற்றி கள ஆய்வு

புதுக்கோட்டை

மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பற்றிய கள ஆய்வு மேற்கொண்ட ஹரிஷ்மாலை கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திரசேகர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில்   வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் இலவசமாக  வழங்கப்பட்ட 156 மின்திருவை   பயன்பாடு , செயல்பாடு, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பற்றிய கள ஆய்வை  ஹரிஷ்மாலை கல்வி  அறக்கட்டளை  நிறுவனர் தலைவர் சந்திரசேகர் மேற்கொண்டார்

பல வருடங்களாக  சக்கரத்தை  கையில் சுற்ற ஒருவரும் மண்பாண்டம்  செய்ய ஒருவரும் ஆக இருவர் சேர்ந்து மண்பாண்டம்  உற்பத்தி செய்து வந்த நிலையில், தமிழக அரசால் வழங்கப்பட்ட மின் மோட்டார் பொருத்திய   மின்திருவை  மூலம் ஒரு நபர் மட்டுமே  அதிக அளவில் மண்பாண்டம் உற்பத்தி செய்ய  கூடிய சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது  தமிழக அரசால் வழங்கப்பட்ட மின்திருவை மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மிகுந்த பயனளித்து வருகிறது.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி ஊராட்சி யில் மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்கின் றனர். பொதுவாக கோடைகாலம் மற்றும் பண்டிகை காலத் தில் மட்டுமே மண்பாண்டங்கள் விற்பனை சூடுபிடிக்கும். தற்போது கோடை காலம் துவங்கியதால் வெயில் காலத்தை குறி வைத்து தொழிலாளர்கள் மண்பானைகளை உற்பத்தி செய்து  வருகின்றனர்.

பண்டை காலங்களில் வீடுகளில் மண்பானையில் தான் சமையல் நடக்கும். மண்பானைகளில் சமைக்கும் உணவை  சிலர் விரும்புபவர்கள் காரணம் அதன் சுவை மற்றும் ஆரோக்கியமும் தான். மண்பாண்டங்களில் சமைக்கும் உணவு நீண்டநேரம் ஆகியும் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக காணப்படுகின்றன.

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது.

கள ஆய்வின்போது மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
மண்பாண்டத்தொழிலாளி  சரஸ்வதி: எங்களுக்கு மண்பாண்டம் செய்வதுதான்  பிரதானத் தொழில். சுமார் 30 வருட காலமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம் . பானை , அடுப்பு, சட்டி , அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம் .

இது நாள் வரை மிகுந்த கஷ்டப்பட்டு கை திருவை மூலம் செய்து வந்தோம் .தற்பொழுது தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட மின்திருவையை பயன்படுத்தி நல்ல முறையில் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்துவருகின்றோம் .

மண்பாண்டம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் எங்களது குடும்பத்தின் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்கின்றது .மேலும்  வாழ்கை தரம் உயர்ந்து உள்ளது என கூறினார்.

மண்பாண்டத்தொழிலாளி கலைச்செல்வி:  பானை , அடுப்பு, சட்டி , அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம் . . தமிழக அரசால்  வழங்கப்பட்ட  இலவச மின்திருவை எங்களது குடும்பத்திற்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது.  மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து  விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம்  குடும்ப செலவிற்கு பயன்படுகிறது என கூறினார்.

மண்பாண்டத்தொழிலாளி மாணிக்கவள்ளி: தமிழக அரசால்  வழங்கப்பட்ட  இலவச மின்திருவை மூலம்  அடுப்பு, சட்டி , அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம் . ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர்- தலைவர் சந்திரசேகர் ஆலோசனையின் படி .உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்களை மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.   இலவச மின்திருவை எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது  என்றார்.

மண்பாண்டத்தொழிலாளி மணிமேகலை: நாங்கள் பல ஆண்டுகளாக  மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம் . பானை , அடுப்பு, சட்டி , அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை தமிழக அரசால்  வழங்கப்பட்ட  இலவச மின்திருவையை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகிறோம்.

இலவச மின்திருவை எங்களது குடும்பத்திற்கு பெரும் உதவியாக உள்ளது.  இலவச மின்திருவை கிடைப்பதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர் , அரசு அதிகாரிகள் மற்றும் ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் சந்திரசேகர்  உட்பட அனைவருக்கும் நன்றி என்றார்.

மண்பாண்டத்தொழிலாளி புஷ்பவள்ளி:  நாங்கள் 20 ஆண்டுகளாக  மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம் . தமிழக அரசால்  வழங்கப்பட்ட  மின்திருவையை பயன்படுத்தி பானை , அடுப்பு, சட்டி , அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை  உற்பத்தி செய்து வருகிறோம். .இலவச மின்திருவை எங்களது குடும்பத்திற்கு மிகுந்த  உதவியாக உள்ளது.

புதுக்கோட்டை
மண்பாண்ட பொருட்கள் உற்பத்திக்கு உதவும் மின் திருவை குறித்து கள ஆய்வு செய்த ஹரிஷ்மாலை கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திரசேகர்

இது குறித்து, ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது: கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.

திருவையில் வைத்து  செய்யும்  ஒவ்வொரு மண்பாண்டமும்  ரொம்ப சுலபமா இருக்கிறது. ஆனால் பானையாக தட்டி எடுக்கிறதே கஷ்டம் ஒவ்வொரு பானையையும் பக்குவமாய் கையாளவேண்டும்.

மேலும்   வங்கிகள்  மூலம் எங்களுக்கு கடன் வசதி கிடைத்தால் மேலும்  தொழிலை பல வழிகளில் விரிவுபடுத்த வசதியாக இருக்கும்  மற்றும்   இலவச மின்திருவை கிடைப்பதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர் , அரசு அதிகாரிகள்  வழிகாட்டுதலின்படி  மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு  ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை  மூலம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்  சந்திரசேகர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top