Close
நவம்பர் 22, 2024 7:08 காலை

தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ பரப்புக்குள் இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?.!.

தமிழ்நாடு மக்கள் தொகை

தமிழ்நாட்டின் மக்கள் தொகை வசிப்பிடம்

தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ பரப்புக்குள் இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?..ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!!

உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை இருக்கும் பகுதி தமிழகம்தான் என்றும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 600 பேர் வசிப்பதாகவும் ஒரு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும். அந்த வகையில் கடைசியாக 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மக்கள்தொகை
தமிழகத்தில்ஒரு சதுர கிமீ வசிக்கும் மக்கள்

அந்தகணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மக்கள்தொகை 7.2 கோடி பேராகும். தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,058 சதுர கிமீட்டராகும். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 550 பேர் வசிக்கிறார்கள்.

புவியியல் ஏற்றத்தாழ்வுகள்புவியியல் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தமிழக மக்கள் தொகை மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. தேசிய சராசரியான ஒருவருக்கு 0.4 ஏக்கர் எனும் அடர்த்தியை விட 33 சதவீதம் தமிழகத்தின் அடர்த்தி அதிகம்.

இந்த தமிழகத்தின் பகுதிகள் திசைகளை வைத்து நான்காக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் தென் பகுதிஅவை மேற்கு, வடக்கு, மத்திய, தெற்கு ஆகியவை ஆகும். இதில் தமிழகத்தின் தென் பகுதியில் மக்கள் தொகை 1.777 கோடி பேராகும்.

இதன் பரப்பரளவு 38886 சதுர கிலோமீட்டர். அடர்த்தியானது ஒரு சதுர கி.மீ.க்கு 457 ஆகும். அது போல் மத்திய தமிழகத்தின் மக்கள்கொரை 1.355 கோடியாகும். இதன் பரப்பளவு 24602 சதுர கி.மீ. ஆகும்.

இதன் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி.மீ.க்கு 551 பேராகும்.மேற்கு பகுதிதமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தின் பரப்பளவு 39325 சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை- 1.86 கோடியாகும். அடர்த்தியானது ஒரு சதுர கி.மீ. க்கு 473 பேரா கும்.  அது போல் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பரப்பளவு 27945 சதுர கி.மீ. ஆகும்.

மக்கள்தொகை 2.2 கோடியாகும். அடர்த்தியானது ஒரு சதுர கி.மீ.ருக்கு 786 ஆகும்.மக்கள் அடர்த்தி குறைவுமேற்கு பகுதியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களும் தெற்கு பகுதியில் திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், மத்திய பகுதியில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கடலூர், அறந்தாங்கி ஆகியவை மேலும் வளர வேண்டும். வடக்கு பகுதியில் திருவண்ணாமலையி்ல மக்கள் அடர்த்தி குறைவு.

கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் முதலீடு தேவைப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top