Close
நவம்பர் 22, 2024 1:34 காலை

ஈர நெஞ்சம் அறநிலையம்… கோவையின் அடையாளம்..

கோயம்புத்தூர்

ஆதரவற்றோரின் ஆலமரம் ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம்… இந்த ஆறெழுத்து கோவை மாநகரின் ஆதரவற்றோரின் துயர்துடைக்கும் கரங்களாக திகழ்கிறது.

கல்வியின் மகத்துவம் அறிந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பாக அளிக்கப்படும் மதிய உணவுத்திட்டம் மூலம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ராமருக்கு அணில் செய்தது போல ஈரநெஞ்சம் அறநிலையம்  சார்பாக கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் கோவை  ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலை உணவு மற்றும் மாலை வேளையில் சிற்றுண்டியும் ஈரநெஞ்சம் அறநிலையம் பராமரித்து வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது . கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வுக்காக சிறப்பு வகுப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 21/04/22 இன்று முதல் பள்ளியில் மாலை வேளையில் சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர் களின் உதவியுடன் மீண்டும் சிற்றுண்டி திட்டம் துவங்கி மாணவர்களுக்கு தேநீர் , பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது .

காப்பகத்தில் உள்ள லட்சுமி பாட்டி கூறும்போது : பள்ளியில் மாலைவேளையில் நடக்கும் சிறப்பு வகுப்பில் கற்க வரும் மாணவர்கள் மிகுந்த சோர்வுடன் இருப்பதும் , இதனால் அவர்கள் உற்சாகமின்றி சிறப்பு வகுப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதனை எண்ணி காப்பகத்தில் உள்ள சக முதியவர்கள் இணைந்து எங்களது பேரக் குழந்தைகள் போல இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடிவு செய்து இன்று முதல் இந்த உன்னத திட்டத்தை துவக்கி உள்ளோம் . கொரோனா காலத்திற்கு இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் மாணவர்களுக்கு உணவு வழங்குவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top