Close
நவம்பர் 22, 2024 1:38 காலை

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

முதலமைச்சர் இளைஞர் விருது

புதுக்கோட்டை மாவட்டம், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு இணையதளம் வாயிலாக 10.05.2022 -க்குள் விண்ணப் பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தகவல் தெரிவித்தார்.

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும்பொருட்டு,‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1,00,000 – ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம்ஆகியவைகளை உள்ளடக்கி யதாகும்.

அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப் பட்டுள்ளன.
15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்-பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 2022 (01.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, ந் தேதி 2022 (31.03.2022) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங் கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள்சமுதாயநலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்றியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும்  இருத்தல் வேண்டும்.
மத்திய- மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் -கல்லூரிகள்- பள்ளிகளில் பணியாற்றுபவர்கள்  இவ்விருதிற்கு  விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம்  www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2022 மாலை 4  மணி ஆகும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top