Close
நவம்பர் 22, 2024 3:52 காலை

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற மிதவை கப்பல்கள்…

பாம்பன் பாலம்

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற மிதவைக்கப்பல்

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பல்களை   பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்

இராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பலகள். மற்றும் மீன் பிடி விசைப்படகுகள் கடந்து சென்றன. இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன்தூக்குப் பாலம் புகழ் பெற்றதாகும். இந்த கடல் வழிப்பாதை வழியாக கொல்கத்தா, அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம்.

இந்த தூக்குப்பாலத்தின் வழியாகத்தான் இராமேஸ்வரத்திற்கு ரயில்கள் செல்கின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விலிஞ்சியம் பகுதிகளில் இருந்து கிருஷ்ணாபட்டி செல்ல மிதவை கப்பல் ஒன்றும், கோவாவில் இருந்து கொல்கத்தா செல்ல ஒரு மிதவை கப்பல் பாம்பன் தெற்கு துறைமுகத்திற்கு வந்தன. அதே போல் கொல்கத்தாவில் இருந்து கர்நாடகா நோக்கி செல்வதற்காக  மிதவை படகு ஒன்று பாம்பன் வடக்கு கடல்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

இன்று காலை விலிஞ்சியம் பகுதியை சேர்ந்த மிதவை கப்பல்கள் பாம்பன் தூக்கு பாலம் திறக்கபட்டு கிருஷ்ணாபட்டிணம் நோக்கியும், கோவாவில் இருந்து கொல்கததா நோக்கி ஒரு மிதவை கப்பல் சென்றன. இதனை தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் காத்திருந்த மிதவை கப்பல் ஒன்று கர்நாடகா நோக்கி அடுத்தடுத்து சென்றன.

மேலும் 10 க்கும் மேற்பட்ட உள்ளூர் மீன் பிடி விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. பாம்பன் பாலம் வழியாக மிதவைகள் கப்பல்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகுகள் அடுத்தடுத்து கடந்து சென்றதை பாம்பன் சாலை பாலத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் செல்போன்களில் இந்தக்காட்சிகளை வீடியோ எடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top