தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்டவர்த்தகக் கழகத்தின் கௌரவத் தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான ‘அறமனச் செம்மல்’ சீனு. சின்னப்பா தனது 70-ஆவது அகவையில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு காலமானார்.
அவரின் புகழ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 2.5.2022 திங்கள்கிழமை மாலை 4 மணி வரை புதுக்கோட்டை நிஜாம் காலனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் இறுதி ஊர்வலம், நல்லடக்கம் புதுக்கோட்டை கம்மங்காடு தோட்டத்தில் ( பெருங்கொண்டான்விடுதி- புதுகை- தஞ்சை சாலை) நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் இவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவுக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்வுமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, கம்பன் கழகச்செயலர் இரா. சம்பத்குமார், வெங்கடேஸ்வரா பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, உலகத் திருக்குறள் பேரவைபுதுக்கோட்டைக் கிளை செயலாளர் மு. இராமுக்கண்ணு.
வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன், மூத்த மருத்துவர் சா.ராமதாஸ், மருத்துவர் சலீம், ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மைய நூலக அலுவலர் பா. முத்து, நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் மற்றும் உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், பல்வேறு இலக்கிய, சமூக அமைப்புகள், சேவை சங்கங்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வர்த்தகர் கழகம் சார்பில் கடையடைப்பு:
புதுகோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் வளர்ச்சிக்கு இறுதி வரை பாடுபட்ட கெளரவத் தலைவர் சீனு.சின்னப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை (2/5/2022) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களை அடைத்து அஞ்சலி செலுத்த வேண்டுமென மாவட்ட வர்த்தக கழக தலைவர் எம்.சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.