Close
நவம்பர் 22, 2024 4:52 காலை

பாம்பு பிடிப்பதை வாழ்கையாகக் கொண்ட கோவை முதியவர்..

கோவை

பாம்புபிடி வீரர் ராமசாமி

 கோவையில் பாம்பு பிடிக்கும் சாகசத்தை வாழ்க்கையாகக் கொண்டவர்  ராமசாமி.   ஒரு காலத்தில் பிரபலமானவர் , ஏறத்தாழ 5000 பாம்புகளுக்கு மேல பிடித்திருக்கிறார்.

பாம்பு பிடிக்கும்போது பல முறை பாம்பு இவரை தீண்டியது. அதற்காக இவர் பார்த்த சுய வைத்தியதால் கைவிரல்  பாதிக்க  இவருடைய விரலை பார்த்தாலே தெரியும் பாம்பு கடித்த விரலை ஏதோ இலையை வைத்து கட்டியதால்  விரல் இப்படி வளைந்து  போனது..

பாம்பு கடித்தால் கடித்த இடத்திற்கு மேல் கயிறால் கட்டுவது சரியா என்று கேட்டதற்கு , அதற்கு அவர் அதெல்லாம்  செய்யக் கூடாது , வெள்ளாட்டின் பாலை எடுத்து நாகதாலி வேர் போட்டு ஊற வச்சி உலர்த்தினால் பால் நீல நிறமாகும் அதை பாம்பு கடித்தவருக்கு கொடுக்கவேண்டும். அப்போது நல்ல பலன் கிடைக்கும். இது முதலுதவியாக எடுத்துக் கொண்டு அடுத்ததாக மருத்துவமனைக்கு போகவேண்டும் என்றார்.

இப்போது இவருக்கு வயது 90  -ஐ நெருங்கி உடல் நலிவுற்ற போதும் கூட  இப்போதும் பாம்பு பிடிக்க தயாராக இருப்பதாக  பலம் காட்டுகிறார் ராமசாமி. இவரது துணிச்சலும் தைரியமும் யாருக்கும் வரும் என்பது மிகப்பெரிய கேள்வி. ஓல்ட் இஸ் கோல்டு .

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top