Close
நவம்பர் 22, 2024 1:06 மணி

ஷவர்மா உண்மையாகவே ருசியாக இருக்கா ? இல்லையா ? விரிவாக பார்ப்போம்

ஷவர்மாசிக்கன்

ஷவர்மா சிக்கன்

கடந்த சில நாட்களுக்கு முன் ஷவர்மா உணவு குறித்து தான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம், கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்து உண்மைதான் என்றாலும் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை மருத்துவத்துறையினர் ஆய்வு செய்தனர். உயிரிழந்த சிறுமிக்கு பிரேத பரிசோதனையும் நடந்தது. பிரேத பரிசோதனை படி சிறுமியின் உயிரிழப்பிற்கு ஷிகெல்லா வகை பாக்டீரியாதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவில் இந்த பாக்டீரியா பரவும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பரவியதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்றும், மேலும் 3 பேருக்கு இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஷவர்மா உண்மையாகவே ருசியாக இருக்கா ? இல்லையா ? நல்லதா கெட்டதா.. விரிவாக பார்ப்போம்..அப்புறம் ஏன் நாம் அதை வாங்கி சாப்பிடுகிறோம் ? என்ற கேள்விக்கு அது ஒரு பேஷன் ஆகிவிட்டது …கும்பல் மனப்பான்மை..

ஷவர்மா சாப்பிடுறேன் என்று வலை தளங்களில் போஸ்ட்போடுவது நாகரிகத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.. பீட்ஸாவுக்கு அப்பறம் கார்ப்ரேட்களால் உருவாக்கப்பட்ட இன்னொரு மாபெரும் மோசடி உணவு ஷவர்மா ..

இந்தியாவுல ஷவர்மா எப்படி வந்தது… வளைகுடா நாடுகளில் ஷவர்மா நூறு ஆண்டுகளாக இருக்கிறது. அங்குதான் உருவானது. எந்த ஒரு மாமிசத்தையும் நேரடியாக தீயில் வாட்டி உண்பது ஆதிகால மனிதனிடம் தொடங்கியது. பாதுகாப்பான விஷயமும் அதுதான். ஆனால், ஷவர்மாவும் கிரில் சிக்கனும் எப்படி விஷமாகிப் போனதற்கு காரணம். மெரினேட் பண்ணும் போது ஏற்படும் தவறுதான்.

சவுதி அரேபியா மாதிரியான வளைகுடா நாடுகளில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கெடுபிடிகள் அதிகம். அங்கு மாமிசத்தை சுத்தம் செய்வதில் தீவிர கவனம் செலுத்து கின்றனர். சாதாரண நீரில் கழுவுவதில்லை புட் சானிடைஸ் தண்ணீரில் சுத்தம் செய்கின்றனர் அடுத்ததாக மசாலா சேர்க்கையில் முதல்தர பொருள்கள். கலர் பொடியை தவிர்க்கிறார்கள்

மேரினேட் என்பது மாமிசத்தை மசாலா சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊறவைப்பது. இதில், 12 மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் ஷவர்மா டேஸ்ட் கிடைக்காது. வெளிநாடுகளில் மசாலா கலந்து ரூம் டெம்பரேச்சரில் வைக்க மாட்டார்கள். இதற்கென தனியே பிரீஸர் பயன்படுத்து வார்கள். வெளிக்காற்று படாததால் வைரஸ்கள் உருவாகாது

இதன்பிறகு மாமிசத்தை வேக வைக்கும் முறைதான் மிகவும் முக்கியமானதாகும். அதாவது ஷவர்மா நேரடியான தீ ஜூவாலையில் படாமல் வெப்பத்தால் வேகவைக்கப்படும். ( கிரில் சிக்கன் மேத்தேடுதான்- இதில் கிரில் சிக்கன் கண்ணாடி அடைத்த பெட்டிக்குள் வேகவைக்கப்படுகிறது). அனல் உள்ளுக்குள்ளயே இருக்கும். ஆனால் இதில் பாதி கிருமிகள் அழியாது. நல்லா ஆக்டிவேட் ஆகி இன்னும் வயித்துக்குள்ளபோய் நல்லா பெருகும் )

வெளிப்புற வெப்பத்தில் எந்த மாமிசமாவது முழுசா வேகுமா ? என்பதை நான் யோசிக்க வேண்டும். தற்பொழுது  தெருவுக் குத் தெரு மினி வேன்களில் ஷவர்மா விற்பனையாகிறது. திறந்த வெளியில் காற்றின் வேகத்தில் எப்படி மாமிசம் வேகும் ?  வாய்ப்பே இல்லை. பாதி பச்சையாகவே இருக்கும். இதில் தூக்கலான மசாலா வாசனை காரணமாக நாம் கண்டு பிடிக்க விடாமல் செய்து விடும்.
ஷவர்மால ஊத்திப் புரட்டித்தர பயன்படும் மயோனிஸ் இன்னொரு விஷம். அதாவது பிராய்லர் மாமிசத்தை பேருக்கு சுத்தம் செய்து, தரமற்ற மசாலா, சாயப்பொடியில் ஊற வைத்து பிரிட்ஜில் வைக்காமல் வெளியிலேயே 6 அல்லது 7 மணி நேரம் ஊற வைக்கப்படுகிறது

இதை வெறும் அனலில் வெந்தும் வேகாமல் இருக்கும் மாமிசத்தை சாப்பிடும்போது உயிருக்குத்தான் ஆபத்து வரும். இல்லையெனில் புட் பாய்சன் ஆகிய கொஞ்ச காலத்தில் வயிற்றில் புற்று நோய்தான் வரும். உச்சகட்டம் மரணம்தான்

இதைத் தவிர்த்திட மாமிசத்தை குழம்பு மாதிரி வேகவைச்சு சாப்பிடலாம்.இல்ல எண்ணைல பொறிச்சு சில்லியா சாப்பிடலாம்.இது ரெண்டுமே 100 டிகிரி செல்சியஸ்ல கொதிக்கும் முறையால், கிருமிஇருந்தாலும் அழிந்துவிடுவதால் பாதுகாப்பான உணவாக மாறும்.

பிராய்லர் கோழி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசிகள் போடுவதும் அனைவருக்கும் தெரியும். அது 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைக்கும் போதே பாதிதான் அழியும், வெறும் அனலில் எப்படி அழியும் .அதுக்குள்ள இருக்கிர கெமிக்கல்லாம் நல்லா ஆக்டிவேட் ஆகி உடம்பதான் கெடுக்கும்..

முக்கியமான மற்றொன்று மயோனிஸ் , ஷவர்மாவ இதில் தான் கலக்குவார்கள்.. இது முட்டையோட வெள்ளை கருவைமட்டும் எடுத்து , மிக்ஸில நல்லா அறைச்சு பூண்டும் , இஞ்சி உப்பு சேர்த்தால் போதும் தயாராகிவிடும் ஆனால் சீக்கிரம்  கெட்டுப் போயிரும்.. 5 மணி நேரம் கெடாம இருக்கனும்னா பிரசர்வேட்டீவ்ஸ் சேர்க்கனும்.

அஜினமோட்டோ சேர்க்கனும் , சோடியம் பாஸ்பேட் சேர்க்க னும்..நல்லா பாத்துக்குங்க.. நீங்க சாப்பிடுவது ஷவர்மா + மயோனிஸ் மட்டும் இல்ல.. அதில் ஏகப்பட்ட கெமிக்கல்ஸ் , ஆக்டிவேட் ஆன வைரஸ் , ஒவ்வாமை பாக்டீரியாஸ் எல்லாம் சேர்ந்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாக்குக்கு ருசி மட்டும்தான் வேண்டும் என்றால் இளமையி லேயே வராத நோய்கள்தான் வரும்.

தயவு செய்து குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைக ளுக்கு ஷவர்மா , கிரில் சிக்கன் கொடுக்கவே கொடுக்கா தீங்க..சுத்தமில்லாத உணவு ஷவர்மா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top