ஈரோட்டை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருந்தால் என்ன… மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை தன் செயலால் காட்டியவர்.
இப்போது கம்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருவதுடன் சொந்தமாக கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்கி 5 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கும் சாதனை பெண் தொழில்முனைவோராகத்திகழ்கிறார்.
தன்னுடைய வருமானத்தில் குடும்பத்தை பார்த்துக் கொள்வதுடன் தன்னுடைய தங்கைக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
எனக்கு யாருமே வாய்ப்பு கொடுப்பதில்லை என்று சொல்ப வர்கள் மத்தியில் தனக்கானவாய்ப்பை உருவாக்கி சாதனை செய்து கொண்டிருக்கும் கீதாவின் வாழ்க்கை கதை நம் அனைவருக்கும் நிச்சயம் புது நம்பிக்கை கொடுக்கும்.