குரூப் 2 (Group11) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு..
உங்களது நுழைவு சீட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்க. இந்த முறை நிறைய மாற்றங்கள் உள்ளது.
1. மாஸ்க் (முகக்கவசம்) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
2 காலை 8.30 -க்குள் தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள். 9 மணிக்கு மேல் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.
3. நுழைவு சீட்டில் கண்டிப்பாக கண்காணிப்பாளர் வசம் கையெழுத்து வாங்க வேண்டும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு போகும் வரை வைத்திருத்தல் அவசியம்.
4. அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும். ஏதாவது ஒரு கேள்வி விடை அளிக்கவில்லை என்றால் கூட மைனஸ் மார்க். பதில் தெரியவில்லை என்றால் option E ஐ shade பண்ண வேண்டும்.
5. உங்களது விடைத்தாள் தானா என்பதை கவனமாக சரி பார்த்து விட்டு பெயர் தேர்வு எண் உங்கள் புகைப்படம்
சரியாக உள்ளதை உறுதி செய்து விட்டு எழுத ஆரம்பியுங்கள்.
6. விடைத் தாளின் கடைசியில் உங்களது இடது கை பெரு விரல் ரேகை வைக்க வேண்டும். நீங்கள் கையேழுத்து போட வேண்டியது போட்டு விட்டீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். விடைத்தாளில் எந்தவொரு விடுதலும் இன்றி நிரப்பி விடுங்கள்.
7. விடை எழுதி முடித்த பின் உங்களுக்கு மேலும் 15 நிமிடம் கொடுப்பார்கள் அப்போது A எத்தனை B எத்தனை C எத்தனை D எத்தனை நீங்கள் விடை எழுதி இருக்கிறீ்களோ அதற்குரிய இடத்தில் நிரப்ப வேண்டும். மொத்தம் 200 என்று வர வேண்டும்.
8. உங்களுடைய ID proof ஒன்று கையில் வைத்துக் கொள்ளுங் கள். மேலே கொடுக்கப் பட்ட விதிமுறைகள் சரிதானா என்பதை நீங்களும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்த்துகள்.