Close
நவம்பர் 22, 2024 8:42 காலை

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் தமுஎகச திருகோகர்ணம் கிளை மாநாடு

தமுஎகச

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கிளை தமுஎகச மாநாட்டில் பேசிய மாநிலத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருக்கோகர்ணம் கிளை மாநாடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .

கிளைத் தலைவர் முனைவர் சு.துரைக்குமரன் தலைமை வகித்தார். த மு எ க ச மாநில துணைத்தலைவர் கவிஞர் ஆர்.நீலா அவர்கள் மகளிர் அரங்கத்திற்கு தலைமை வகித்தார்.
அதில் அவர் பேசுகையில் ,சிறுகதை பயிலரங்கில் தான் கற்று கொண்டவைகளையும் ஒரு படைப்பாளி கதையில் கூட யாரையும் கொல்லக்ககூடாது என்றும் ,யார் உண்மையான தியாகி என்று ஒரு கதையும் சொல்லி தன் எழுத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

எழுத்தாளர் ஷஹிதாவின்  மொழிபெயர்ப்பு நூலான” அன்புள்ள ஏவாளுக்கு” நூலை திறனாய்வு செய்து கவிஞர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் பேசுகையில், இந்த நாவலில் மழலையின் கொச்சை மொழி வெளிப்ப்படுகிறது, பூர்வகுடி மக்கள் எந்தந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பதற்றம், வலி மற்றும் கதையின் ஆன்மா சிதையாமல் உள்ள கதையின் போக்கு போன்றவை குறித்து பேசினார்.
“ஆயிரம் சூரிய பேரொளி“நாவல் குறித்து  கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் கதைக்களமான வரலாற்று நாவலுக்கு என்னென்ன பாடுபொருள் வேண்டுமோ அதெல்லாம் இந்த நாவலில் உள்ளது என ஆய்வுரை வழங்கினார்.

மானக்கேடு” நாவல் குறித்து கவிஞர் உஷாராணி துரைக்குமரன் பேசுகையில், மொழியாக்கமும், மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எவ்வாறு வேறு படுத்திக் காட்டுகிறது என்று  குறிப்பிட்டார்.

தமுஎகச

கருத்தரங்கிற்கு தலைமை வகித்து பாடலாசிரியர் இரா.தனிக்கொடி பேசுகையில், அவரவர் சாப்பிடும் உணவு குறித்தும் நமக்கான உரிமைகள் குறித்தும்  வலியுறுத்தினார்.
கவிஞர் ராசி.பன்னீர் செல்வன் தொடக்கவுரையில்,  இந்தியாவில் உண்மையான மக்களாட்சி என்பது அரசியலமைப்பு வழிகாட்டுதல் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய மரியாதை செய்வதுமே ஆகும். இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார்.

மாவட்ட தலைவர் ஸ்டாலின் சரவணன் பேசுகையில், நாம் எழுதும் புத்தகம் நமக்கு தெரிந்த படைப்பாளிகளுக்குள் ளேயே சுற்றி வருகிறது. ஒரு படைப்பு பொதுவெளியில் புதிய வாசகனை சென்றடையும் போதுதான் அது உண்மையான பேசப்படும் படைப்பாக இருக்கும் என்றார்.
த மு எ க ச -வின் மாநில தலைவர் “வாழும் கலைவாணர்” மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், தனித்துவம், பன்மைத்துவம் என்ற கருத்திலும் கதை, அரசியல் புரிதல், இந்தி திணிப்பு , அமைப்பு முறை போன்றவை குறித்து தனக்கே உரிய சிந்தனை கலந்த நகைச்சுவையோடு குறிப்பிட்டார்..
மாநில தலைவர்களில் ஒருவரான கவிஞர் நா.முத்து நிலவன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து  பேசுகையில், த மு எ க ச வில் இணைந்து 47 ஆண்டுகள் ஆனதையும்
தொடர்ந்து பயணிக்கும் அனுபவங்களையும் த மு எ க ச  அமைப்பின் செயல்பாடுகள் பற்றி  குறிப்பிட்டார்.

முன்னதாக கவிஞர் சு.பீர்முகமது வரவேற்றார். நிறைவாக கிளைச் செயலாளர் முனைவர் மகா சுந்தர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top