Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

கோவையில் ஜவுளித்துறையில் பதிவு செய்தல் மற்றும் தாக்கல் செய்தல் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மும்பை ஜவுளி ஆணையர் அலுவலக துணை இயக்குனர் மஹார்னப் மன்னா

ஈரோட்டில் ஜவுளித்துறை பதிவு செய்தல் மற்றும் தாக்கல் செய்தல் குறித்த நேரடி விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது

கோயம்புத்தூர் மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் சார்பாக இணைய தளத்தின் வழி மாதாந்திர புள்ளிவிவர அறிக்கை மற்றும் வருடாந்திர புள்ளி விவர அறிக்கையை ஆன் லைன் மூலம் பதிவு செய்தல் மற்றும் தாக்கல் செய்தல் குறித்த நேரடி விழிப்புணர்வு பயிலரங்கம் ஈரோடு: சித்ரா கலையரங்கில் நடைபெற்றது .

மும்பை ஜவுளி ஆணையர் அலுவலக துணை இயக்குனர் மஹார்னப் மன்னா ,பல்வேறு ஜவுளி உற்பத்திப் பிரிவுகளுக்கான புள்ளிவிவர அறிக்கையை (TSRS)இணைய தளத்தில் தாக்கல் செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்கும் உகந்தவாறு பதிவு செய்யும் நடைமுறை மற்றும் செயல்முறையை பற்றி விளக்கினார்.

கோயம்புத்தூர் மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக பொறுப்பாளர் மற்றும் துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ,மூலப்பொருள் நுகர்வு,உற்பத்தி, விநியோகம், மாத இறுதி கையிருப்பு, வேலைவாய்ப்பு, நிறுவப்பட்ட திறன் போன்ற புள்ளிவிவர தரவுகளை சேகரிப்பதன் அவசியம் குறித்தும், அவை எங்ஙனம் ஜவுளித்துறையில் பொருத்தமான கொள்கை முடிவை எடுக்க முக்கிய பங்காற்றுகிறது.

இனிமேல்,அரசின் கீழ் ஏதேனும் சலுகைகளைப் பெறுவதற்கு, ஜவுளி உற்பத்திப்பிரிவின் திட்டங்கள் மற்றும் சட்டப்பூர்வ புள்ளி விவர அறிக்கைகளை சமர்ப்பித்தல் கட்டாயமாக்கப்படும்., ஜவுளி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் தங்களது MSR & ASR மற்றும் சிட்டா நூல் (hankyarn )காலாண்டு ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்வதும் சமர்ப்பிப்பதும் முழு அளவில் இல்லை; ஆகவே, அனைத்து ஜவுளி உற்பத்தி பிரிவுகளும் ஆன்லைனில் பதிவு செய்து ஜவுளி ஆணையர் அலுவலகத்தில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க (சித்ரா)இயக்குனர் முனைவர் பிரகாஷ் வாசுதேவன், தமிழ் நாடு நூற்பாலைகள் சங்க இணைச்செயலர் பி.ஆர்.சண்முகம், தென்னிந்திய ஆலைகள் கூட்டமைப்பு (SIMA ) பொதுச்செயலாளர் முனைவர் கே. செல்வராஜூ , தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (SISPA )மேலாளர் வெங்கடேஷ் பிரபு மற்றும் அதன் சங்கங்களின் பிரதிநிதிகள் பயிலரங்கில் கொண்டனர்.

தமிழ் நாடு நூற்பாலைகள் சங்க இணைச்செயலர் பி.ஆர்.சண்முகம், தென்னிந்திய ஆலைகள் கூட்டமைப்பு (SIMA ) பொதுச்செயலாளர் முனைவர் கே. செல்வராஜூ , தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (SISPA )மேலாளர் திரு. வெங்கடேஷ் பிரபு ஆகியோர் ஜவுளிப்பிரிவுகளுக்கு ரிட்டர்ன்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தையும், தேவையின் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top