Close
நவம்பர் 22, 2024 10:51 காலை

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர்  99 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் ரகுபதி-மெய்யநாதன் மரக்கன்றுகள் நடல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்வு

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  99  -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில்  மரக்கன்றுகள் நடப்பட்டன.

கலைஞர் கருணாநிதியின்  99 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வனத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில் (03.06.2022)  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை சார்பாக, முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 99 -ஆ வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அதன்தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வேம்பு, பூவரசு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மண்ணரிப்பு, காற்று மாசடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும் காற்றின் தரத்தினை அதிகரிப்பதற்கு மரம் ஒரு இன்றியமையாத வையாக கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி,  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா பார்த்திபன், , புதுக்கோட்டை எம்எல்ஏ  டாக்டர்.வை.முத்துராஜா,  கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட வன அலுவலர் எஸ்.பிரபா, வனச்சரக அலுவலர் கே.தீபா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top