Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

புதுக்கோட்டை புத்தக திருவிழா மாணவர்களை ஈர்க்கும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாடுகளை விளக்குகிறார், அறிவியல் இயக்க நிர்வாகி எஸ்.டி பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்;நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் மாலை நேரங்களில் தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக காலை நேரங்களில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகின்றனர்.

அறிவியல் செயல்பாடுகளில் மாணவர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனர். எளிமையான அறிவியல் விளக்கம், செய்து பார்த்து கற்றல், மந்திமா? தந்திரமா? போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை
அறிவியல் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவிகள்

அதனொரு பகுதியாக புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளன்று அன்னவாசல் பகுதிகளிலிருந்து அரசு பள்ளி மாணவர்கள், பொன்னமராவதி லைன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, மேல தானியம் நேரு மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு லயன்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். புத்தக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அ.மணவாளன்  துவக்கி வைத்து பேசினார். அறிவியல்   செயல்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்  செய்து காட்டி குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டி உரையாடினார். 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top