Close
செப்டம்பர் 20, 2024 2:27 காலை

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்: மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் பேசுகிறார், பாரதி மகளிர் கல்லூரி விரிவுரையாளர் உஷாநந்தினி

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நான்காவது நாள் காலை அமர்வில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் நடைபெற்றது.

அதில்  வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ் துறை விரிவுரையாளர் திருமிகு கா. உஷா நந்தினி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அவர் பேசுகையில் குழந்தைகள் தங்களது வாழ்க்கையில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு நம்பிக்கையை புத்தகங்களும் வாசிப்பும் தரும். குழந்தைப் போராளிகள் கிரெட்டா தும்பர்க், மலாலா போன்றவர்களின் பணிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளி  முதுகலை வணிகவியல் ஆசிரியர் பழ. சிவகுமார், முதுகலை வரலாற்று ஆசிரியர் ச. ரங்கராஜு, ஆய்வக உதவியாளர் ஆர். ஜான்சிராணி மற்றும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

பின்னர் அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டினார்.பிற்பகல் நிகழ்வில் சதாசிவம் அவர்கள் மந்திரமா தந்திரமா நிகழ்வினை நடத்திக் காட்டினார்.

இந்நிகழ்வில்  எஸ்.ரெங்கராஜன், ஜெயராம், சக்திவேல், அ.மணவாளன், க.ஜெயபால், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top