Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

புதுக்கோட்டை பிரஹதாம்பாள்கோயில் தேர் விபத்து: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோயில் தேர் விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அரசின் நிவாரண உதவி அளிக்கிறார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. உடன் ஆட்சியர் கவிதா ராமு. எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் தேர் விபத்து நேரிட்ட  இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில், 31.07.2022 அன்று நடைபெற்ற ஆடிப்பூர தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தேர் விபத்து நடந்த இடத்த  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  (01.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க, தேர் விபத்தில் காயமடைந்த 8 நபர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை, நேரில் பார்வையிட்டு, ஆறுதல்கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 க்கான காசோலைகளையும் வழங்கினார்.

பின்னர்  அமைச்சர்  பி.கே. சேகர் பாபு கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்த செய்தியினை கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் வருத்தமுற்றார். இவ்விபத்து குறித்து விசாரித்து உரிய மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், காயமடைந்த 8 பேருக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

தேர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் அவர்கள் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ளவும் மற்றும் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவத்துறைக்கு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை
புதுககோட்டையில் கோயில் தேர் விபத்து நடந்த இடத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மேலும் வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என    அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு,   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் த.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி.

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர்கள் ஜெயராமன், சூரியநாராயணன், உதவி ஆணையர் அனிதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top