Close
நவம்பர் 22, 2024 5:52 காலை

நகராட்சி தலைவர்கள்,  ஆணையர்கள்,பொறியாளர்களின் அலுவாகப் பயன்பாட்டிற்காக 187 புதிய வாகனங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கல்

சென்னை

நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 187 புதிய வாகளங்களை வழங்கிடும் வகையில் கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகராட்சி தலைவர்கள்,  ஆணையர்கள்,பொறியாளர்களின் அலுவாகப் பயன்பாட்டிற்காக ரூ.23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ,  நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதற்கட்டமாக 100 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 91 ஸ்கார்பியோ வாகனங்களும், ஆணையர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும், என மொத்தம் 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு முதலமைச்சரால் நேற்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், அப்புதிய வாகனங்களுக்கான சாவிகளை நகர்மன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர்  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என் நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர்  பா. பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு 4 புதிய வாகனங்கள்:

புதுக்கோட்டை
புதுகை நகர்மன்றத்தலைவர், ஆணாயருக்கு அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்கள்

புதுக்கோட்டை நகராட்சிக்கு தலைவர் மற்றும் ஆணையர், பொறியாளர்  உள்பட 4 பேருக்கு  முதலமைச்சரால் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ வாகனங்கள்  புதுக்கோட்டை நகராட்சி முகாம் அலுவலக வளாகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top