அகில இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவகளுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிப்பு.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு நாட்டு மக்கள் வறுமையின்றி வளமுடன் வாழ, காலத்தின் தேலை காந்தி
விரும்பிய “கிராம இராஜ்யமும், சுதேசி பொருளாதாரமும்“. முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000, பள்ளி மணவர்களுக்கான தலைப்பு ( 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை).
மாணவர்கள் நலன் மேம்படவும், சமூகம் சீர்படவும் காலத்தின் தேவை “காந்தியக் கல்விமுறை” முதல் பரிசு : ரூ.2000 இரண்டாம் பரிசு : ரூ.1000 மூன்றாம் பரிசு : ரூ.500 (2) மேலும் 10 சிறப்பு பரிசுகள் (கல்லூரி மற்றும் பள்ளி தனித்தனியாக) வழங்கப்படும். கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.09.2022.
கட்டுரை A4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமலும், சுயசிந்தனை யுடன் இருக்க வேண்டும்.கல்லூரி முதல்வர் / பள்ளி தலைமை யாசிரியர் தங்கள் கல்லூரி / பள்ளியில்போட்டி நடத்தி அதில் முதல் இரண்டு கட்டுரைகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
கல்லூரி / பள்ளி முதல்வரின் ஒப்புதல் மற்றும் அடையாள அட்டையின்நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்லூரி / பள்ளி முகவரி மற்றும்மாணவர்களின் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாககுறிப்பிடவும். போட்டி யின் முடிவுகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியான தாகும்.
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி: அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை, 3473 / 1, தெற்கு 2 -ஆம் வீதி, புதுக்கோட்டை -622001 தொடர்புக்கு: 9443668752.04322-22397 மின்னஞ்சல் gandhiperavai@gmail.com போட்டி முடிவுகள் 25.09.2022 அன்று அறிவிக்கப்படும்.
பரிசுகள் வரும் அக்டோபர் 2 -ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும். என பேரவையின் நிறுவனர் வைர.ந.தினகரன் தெரிவித்துள்ளார்.