புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 6-வது நாள் நிகழ்வில் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பேச்சாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகத் திருவிழாவின் 6 ஆவது நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சுழலும் கவியரங்கத்துக்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார்.
கவிஞர்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி, மைதிலி கஸ்தூரி ரெங்கன், கீதாஞ்சலி மஞ்சள், சாமி கிருஷ், நேசன் மகதி, விஜய் ஆனந்த் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
அவரவர் அறிமுகம், சிறு குறிப்பு வரைக, இரு வரி ஓவியம் தீட்டுக, ஒற்றுமை- வேற்றுமை தருக, இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக, பத்து வரிகளில் ஒரு காதல் கடிதம், பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் ஒரு நெம்புகோல் கவிதை ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுகள் இந்தச் சுழலும் கவியரங்கு நடைபெற்றது.
நிகழ்வுக்கு இலுப்பூர் மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.சி. உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இலுப்பூர் கோட்டாட்சியர் மை. குழந்தைசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் எஸ். தினகரன்.
கலைஞர் தமிழ்ச்சங்க தலைவர் த. சந்திரதசேகரன், கவிஞர் ஆர்.எம்.வீ. கதிரேசன், புத்ததிருவிழா ஊடகக்குழுத்தலைவர் சு. மதியழகன். ஐஓப் வங்கி மேலாளர் எம். ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் க. சதாசிவன் வரவேற்றார், புத்தக திருவிழாக்குழு துரையரசன் நன்றி கூறினார்.
இதில் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.