Close
நவம்பர் 22, 2024 1:54 காலை

மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பங்கேற்ற மாணவிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இங்குள்ள 100 அரங்குகளிலும் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறைந்தது ரூ.10 -லிருந்து புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களும் உள்ளன. கணினி மென்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

புத்தகத் திருவிழாவின் தொடக்க நாளில் இருந்தே படிப்படியாக வாசகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. பகலில் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

புதுக்கோட்டை

ஏராளமான புத்தகங்களை மாணவர்கள் வாங்கிச் செல்வ தோடு, பள்ளி நூலகத்துக்கும் ஏராளான புத்தகங்கள் வாங்கி செல்லப்படுகின்றன. அதோடு, அறிவியல் இயக்கத்தின் மூலம் தினமும் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் படையெடுப்பால் புத்தகத் திருவிழா மிகப்பெரிய அளவில் எழுச்சியடைந்துள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் புத்தகங்களை வாங்கிச் செல்வதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி:
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலை அமர்வில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், புதிய, புதிய வேலை வாய்ப்பபுகள் குறித்தும் கடற்படை வணிகத் துறை அதிகாரி கலைமணி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்விற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் கி.கருணாகரன் வழக்கம்போல மாணவர் களுக்கு புத்கங்களை பரிசளித்தார். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எம்.வீரமுத்து, விமலா, கி.ஜெயபாலன் மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top