Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

மாணவர்களின் வருகையால் களை கட்டிய புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் திரண்ட மக்கள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு  ஆயிக்கணக் கான  பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால்  புத்தக அரங்குகளில் விற்பனை களை கட்டியது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இங்குள்ள 100 அரங்குகளிலும் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறைந்தது ரூ.3-லிருந்து புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களும் உள்ளன. கணினி மென்பொருட் களும் விற்பனை செய்யப்படுகின்றன.

புதுக்கோட்டை
புத்தக அரங்கில் குவிந்த மாணவிகள்

புத்தகத் திருவிழாவின் தொடக்க நாளில் இருந்தே படிப்படி யாக வாசகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகின் றனர்.பள்ளி, கல்லூரி ஆயிரக்ககணக்கான மாணவர்களின் படையெடுப்பால்  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம் திணறியது .

ஏராளமான புத்தகங்களை மாணவர்கள் வாங்கிச் செல்வதோடு, பள்ளி நூலகத்துக்கும்  புத்தகங்கள் வாங்கி செல்லப்படுகின்றனர் . அதோடு, அறிவியல் இயக்கத்தின் மூலம் தினமும் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவ மாணவியர்கள் வந்து செல்வதால் புத்தகத் திருவிழா மிகப்பெரிய அளவில் எழுச்சியடைந்துள்ளது. பெரும் பகுதியான மாணவர்கள் புத்தகங்களை வாங்கிச் செல்வதால் புத்தக விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top