Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் சோலச்சியின் சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை

தொவரக்காடு’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞா் தங்கம் மூா்த்தி, எழுத்தாளா் நா. முத்துநிலவன், பேராசிரியா் சா. விஸ்வநாதன், எழுத்தாளா் மு. முருகேஷ் உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் அகநி பதிப்பக அரங்கில் எழுத்தாளர் சோலச்சியின் ‘தொவரக்காடு’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், மரிங்கிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியா் தீ. திருப்பதி, ’சோலச்சி’ என்ற புனைப்பெயரில் இதுவரை 4 சிறுகதைகள், இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். ’தொவரக்காடு’ இவரது 6 ஆவது நூல். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டப் பொருளாளராகவும் உள்ளாா்.

எழுத்தாளா் நா. முத்துநிலவன் ’தொவரக்காடு’ நூலை வெளியிட, தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற கவிஞா் தங்கம் மூா்த்தி, வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், எம்எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், பால புரஸ்காா் விருது பெற்ற எழுத்தாளா் மு. முருகேஷ், கவிஞா் பீா் முகமது, ’சிகரம்’ சதீஷ்குமாா், ’நானிலம்’ இதழின் ஆசிரியா் மணிமொழி, கலை இலக்கியப் பெருமன்ற நகரப் பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top