Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

முறையான ஆய்வும் ஆவணங்களும்தான் வரலாற்றில் இடம்பெறும்: திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்

முறையான ஆய்வும் ஆவணங்களும்தான் வரலாற்றில் இடம்பெறும் என்றார் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.

சந்தைப் பொருளாராம் ஏழை மக்களை காவுவாங்கி பணக்காரர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது என்றார் தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன். 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமையன்று அவர் பேசியது:

1920 முதல் 1980-ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதும் ஏழை, பணக்காரர்கள் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு வந்தது. இந்தக் காலத்தில்தான் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், இலவசங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் சாமான்யர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 1980-க்குப் பிறகு மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியது.

ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத்  தொடங்கியது. பெரும் கார்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் படிப்படியாக குறைக்கப் பட்டன. சந்தைப்பொருளாதாரம் என்கிற பெயரில் இத்தகைய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகிறன. பணக்காரர்களிடம் மேலும் மேலும் சொத்துக்கள் குவிகின்றன. மற்றொரு மக்கம் வறுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

சமூகம்எதையும் சமமாக நடத்துவதில்லை, அதிலும் திருநங்கைகள் படும்பாடு பெரும்பாடு. இந்தச் சூழலில்தான் திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாநில திருநங்கைகள் நலக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆக. 12-ஆம் தேதி அதற்கான வரைவு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கவுள்ளோம். விரைவில் தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலக் கொள்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வரும் என நம்புகிறேன்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் அதிகமாக விற்றதாகக் கூறினர். எல்லாப் புத்தகத் திருவிழாக்களிலும் பொன்னியின் செல்வன் புத்தகம்தான் அதிகளவில் விற்பனையாகிறது.  வெளிநாட்டிலிருந்தெல்லாம் பொன்னியின் செல்வன் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

பொதுவாக புதினத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காலவரிசையை சற்றே மாற்றிக் கொள்வதற்கு எழுத்தாளருக்கு உரிமை உள்ளது. அதன்படி நாவல் எழுதுவோர் கால வரிசையை மாற்றிக் கொள்வார்கள். அதுவே வரலாறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடக் கூடாது.

நம்முடைய ஆய்வுகளை முறையாக ஆவணப்பூர்வமாக அவ்வப்போது எழுதி வைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவை வரலாற்றில் இடம் பெறும். கல்லூரி ஆசிரியர்களுக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது என்றார் ஜெயரஞ்சன்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் தங்க.ரவிசங்கர், நாணயவியல் கழகத்தலைவ் பஷீர்அலி, சிகரம் சதீஸ்குமார் உள்ளிட்டோர் பேசினர். கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top