Close
நவம்பர் 22, 2024 1:18 காலை

கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் கல்லணையில் காவிரிநீர் பிடிப்புபகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுபணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிகல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ,அரசுதலைமை கொறடா கோவி. செழியன்,  மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  ஆகியோர் ஆய்வு  செய்தனர்.

 பின்னர், பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்ததாவது:
தமிழகதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் கல்லணையில் காவிரிநீர் பிடிப்புப்பகுதிகளில் அதிகமழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பானஆய்வு கூட்ட நடத்தப்பட்டது.

காவிரிநீர் பிடிப்புபகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகஉள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்துஉபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளைஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.50 லட்சம் கன அடிக்கு மேல் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிகரையில் 56 கிராமங்களும்,பெண்ணாறுகரையில் 21 கிராமங்களும்,கல்லணை கால்வாய் 30 கிராமங்களும், கொள்ளிடம் கரையில் 21மற்றும் 108 கிராமங்கள் ஆற்றங்கரையோரம் மொத்தம் 235 கிராமங்கள் அமைந்துள்ளது.

இதில் 3 மிகஅதிகபாதிப்பு, 50 அதிகபாதிப்பு, 50 மிதமான பாதிப்பு,92 குறைவானபாதிப்புஎனமொத்தம் 195 கிராமங்களை கண்டறிந்துஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
காவிரிநீர் பாய்ந்துவரும் காவிரி, வெண்ணாறு,கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்.  தண்ணீர் வரத்துஅதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன் படம் (செல்பி) எடுப்பதை தவிர்த்திடவேண்டும். கால்வாய்கள்,ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்துவிட வாய்ப்புள்ளதால் அந்தபகுதிகளில் குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள்  பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய 1 மாவட்டஅளவிலான குழு,3 கோட்ட அளவிலானகுழுக்கள், 9 வட்ட அளவிலான குழுக்கள், 50 சரக அளவினால் குழுக்கள், 4525 முதல் நிலை பணியாற்றுபவர்கள், 689 கால்நடைபராமரிப்பாளர்கள், 175 பாம்பு பிடிப்பவர்கள், 516 மரம் வெட்டுபவர்கள்,105 ஜெனரேட்டர், 170 JCB,   374 power Shaw,  8705 casuarina pole,  மேலும் 96 இடங்களில் கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க 76,165 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுவரை 141 குடும்பங் களில் உள்ள 629 நபர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாமில் தங்கி உள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு முகாம்கள் பல இடங்களில் அனைத்துவசதிகளுடன் தயார் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது.மேலும், நமது மாவட்டத் தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சாரதுறை மற்றும் அனைத்து துறைகளும் ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்புதுறை ஆகியவற்றை தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தஆய்வுக் கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டு வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆலோச னை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அடிப்படை வசதிஅனைத்தும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட

ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24×7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப் எண் 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top