எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.114 கோடியிலான புதிய திட்டங்களை மத்திய கப்பல் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் துறைமுகத்திற்கு வெளியே 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தின நினைவுச்சின்னம், தெருவிளக்குகள், உள் கட்டமைப்பு சாலைகள், பணிகள் கப்பல் சிப்பந்திகளுக்கான மனமகிழ் மன்றம், தங்குமிடம் உள்ளிட்ட ரூ. 114 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் காமராஜர் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் மற்றும் துறைமுக முக்கிய அதிகாரியுடன் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டார்.