Close
செப்டம்பர் 20, 2024 5:49 காலை

கொரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி நிவாரணம்: மத்திய அமைச்சர் வழங்கல்

சென்னை

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் சோனோவால்,

கொரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி நிவாரணநிதியை மத்திய
 அமைச்சர் சர்பானந்த்   சோனோவால் வழங்கினார்.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றி கரோனா தொற்றால் உயிரிழந்த 16 ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 8 கோடியை நிவாரண உதவியாக மத்திய துறைமுகங்கள, கப்பல்  போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சார்பானந்த சோனோவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு சனிக்கிழமை வந்தடைந்தார். சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சோனோவால் ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
 இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு வந்த அமைச்சர் சோனோவாலுவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர்.
 துறைமுகத்தின் மேற்கு கப்பல் தளத்தில் சுமார் 300 ஊழியர்கள் பங்கேற்று வடிவமைத்த தேசிய கொடியை அமைச்சர் பார்வையிட்டார்.
 பின்னர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் சோனோவால்,  துறைமுக நிர்வாக அலுவலக கட்டடத்தில் முன்பாக ரூ. 10 .6 2 லட்சம் மதிப்பீட்டில் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல்லைநாட்டினார்.
 அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை துறைமுக ஊழியர்கள் 16 பேரின் குடும்பத்தின ருக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 8 கோடி நிவாரண உதவியை வழங்கினார். மேலும் துறைமுக மருத்துவமனைக்கு தேவை யான நவீன உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.
 இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சோனாவால் கூறியதாவது:
 நீண்ட கடற்கரை கொண்ட இந்தியாவை வலிமையான துறைமுகங்களைக் கொண்டு கட்டமைப்பதற்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.  சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 567 திட்டங்களை அறிவித்து அதனை படிப்படியாக அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னை துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சாலை பணிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.  விரைவில் பணிகளை தொடங்குவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
 சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்கப் பட்டிருப்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.  இதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
 காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 100 கோடி நிதி உதவியை ஏற்கனவே அளித்துள்ளது என்றார் அமைச்சர் சர்பானந்த் சோனாவால்.
 நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வளத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் தலைவர் சுனில் பாலிவால்,  சென்னை துறைமுக துணைத் கரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி
 நிவாரணநிதி வழங்கிய  அமைச்சர் சர்பானந்த்   சோனாவால் :
 திருவொற்றியூர்,ஆக. 14: சென்னை துறைமுகத்தில் பணியாற்றி கரோனா தொற்றால் உயிரிழந்த 16 ஊழியர்க ளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 8 கோடி யை நிவாரண உதவியாக மத்திய துறைமுகங்கள, கப்பல்  போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு சனிக்கிழமை வந்தடைந்தார். சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சோனவால் ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்த அமைச்சர் சோனாவாலுவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர். துறைமுகத்தின் மேற்கு கப்பல் தளத்தில் சுமார் 300 ஊழியர்கள் பங்கேற்று வடிவமைத்த தேசிய கொடியை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் சோனவால்,  துறைமுக நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் முன்பாக ரூ. 10 . 6 2 லட்சம் மதிப்பீட்டில் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை துறைமுக ஊழியர்கள் 16 பேரின் குடும்பத்தி னருக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 8 கோடி நிவாரண உதவியை வழங்கினார். மேலும் துறைமுக மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.
 இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சோனாவால் கூறியது, சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை துரிதமாக ஆய்வு செய்ய நவீன ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கத் துறையின் சரக்குப்பெட்டக ஆவணங்களின் ஆய்வுகள் விரைவுபடுத்தப்படும்.
நீண்ட கடற்கரை கொண்ட இந்தியாவை வலிமையான துறைமுகங்களைக் கொண்டு கட்டமைப்பதற்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.  சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 567 திட்டங்களை அறிவித்து அதனை படிப்படியாக அரசு செயல்படுத்தி வருகிறது.
 சென்னை துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சாலை பணிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.  விரைவில் பணிகளை தொடங்குவ தற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்கப் பட்டிருப்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.  இதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 100 கோடி நிதி உதவியை ஏற்கெனவே அளித்துள்ளது என்றார் அமைச்சர் சர்பானந்த் சோனாவால்.
 நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வளத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் தலைவர் சுனில் பாலிவால்,  சென்னை துறைமுக துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top