Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில்   நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: நவ 12 -ல் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை தொடங்குகிறது

கூட்டுறவுத்துறை சார்பில் புதுக்கோட்டை சிவபுரம் ஜெஜெ கல்லூரியில் சனிக்கிழமை (12.11.2022) நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை  மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர்  கே. ராஜேந்திரபிரசாத்  வெளியிட்ட தகவல்: நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால். புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 12.11.2022 முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைவுேள்ளது.

இளைய தலைமுறையிருக்கு ஒரு வழிகாட்டுதல், வேலை வாய்ப்புபு, சுய தொழில்  வாய்ப்பு, தங்கநகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பின்னர், கூட்டுறவு வங்கிகள் மற்றம் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக  பணியாற்றலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சியின் போது தங்கத்தைப் பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகையை தரம் பார்த்து  கொள்முதல் செய்தல் உரை கல்லில் தரம் அறிதல், தங்கத்தில்  இன்றைய நவீன தொழி நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கேடிஎம், ஹால் மார்க்    தொடர்பான பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிறுவனத்தால்  பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் தமிழக அரசால்  அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் .இச்சான்றிழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியினை முடித்தவர்கள் அரசு வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்  ஆகியவற்றில்  நகை மதிப்பீட்டாளாராக  பணிபுரிய வாய்ப்புள்ளது.

இப்பயிற்சியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும். கலந்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. வாரத்திற்கு இரணடு நாட்கள் {சனி மற்றும் ஞாயிறு )  மொத்தம் 17  நாட்கள் (100மணி நேரம்) பயிற்சி நடைடெறும். பயிற்சி கட்டணம் ரூ. 4,600/- மட்டும்.

மேலும் விவரங்களுக்கு, கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரின் அலை பேசி எண்களை  9486045666, 9788825339, 6381146217 தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top