Close
நவம்பர் 22, 2024 4:22 காலை

சந்திரயான் – 3 குறித்து 100 பள்ளிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை

சந்திராயன் - 3 நிலவில் தரை இறங்கும் நிகழ்வுகளை நேரடியாக காண்பதற்கான ஏற்பாடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சந்திரயான் – 3 நிலவில் தரை இறங்கும் நிகழ்வுகளை நேரடியாக காண்பதற்கான ஏற்பாடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியர்  ஐ. சா.மெர்சி ரம்யா  தலைமையிலும் , புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சரியாக 6 மணி 4 நிமிடங்களில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய போது அனைவரும் எழுந்து நின்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்நிகழ்வு உற்சாகத்தை தந்துள்ளது.

இந்நிகழ்வில் மக்களவை உறுப்பினர்  எம்.எம். அப்துல்லா எம் பி  கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதைக் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இனிப்புக்களை வழங்கினார்.

புதுக்கோட்டை
தொலைநோக்கி மூலம் பார்த்த எம்பி அப்துல்லா

சிறப்பு நிகழ்வாக தொலைநோக்கி மூலமாக வான் நோக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அலுவலர்கள், மாணவர்கள் தொலைநோக்கி மூலமாக நிலவினை கண்டுகளித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ். டி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அ. மணவாளன், மாவட்டத் தலைவர் எம். வீரமுத்து, க. சதாசிவம், தொலைநோக்கி மூலமாக விளக்கினார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் க.ஜெயராம், பவனம்மாள், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கை , ஊடகத்துறையினர் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர். சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளில் சந்திராயன் மற்றும் வானியலில் உள்ள அறிவியல் குறித்து கருத்துரை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top