Close
நவம்பர் 22, 2024 1:50 காலை

டெலிகிராமில் புதிய அம்சங்கள்..!

டெலிகிராம் (கோப்பு படம்)

டெலிகிராம் காலச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளது. பயனர்களுக்கு ஏற்ப சில புதிய அம்சங்களை புகுத்தியுள்ளது. சில அம்சங்கள் நீக்கப்பட்டு சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், ‘People Nearby’ என்ற அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மிகக் குறைந்த அளவிலான பயனாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், போட்ஸ் மற்றும் ஸ்காமர்கள் தொடர்பான பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக அமைந்ததாகவும் டெலிகிராம் நிறுவனர் பாவல் டுரோவ் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் மூலம் டெலிகிராம், பயனாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்துகிறது. மேலும், வணிகர்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

புதிய அம்சம் – Businesses Nearby

‘People Nearby’ அம்சத்திற்கு மாற்றாக, ‘Businesses Nearby’ என்ற புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. இந்த அம்சம் மூலம், பயனாளர்கள் தங்கள் அருகிலுள்ள உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்களை எளிதாகக் கண்டறியலாம். வணிகங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விவரங்களை பகிர்ந்து, நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம்.

இந்த புதிய அம்சத்தின் முக்கிய நன்மைகள்: போட்ஸ் மற்றும் ஸ்காமர்களின் இடையூறுகள் குறையும். பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதாகக் கண்டறியலாம்.

வணிகங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். டெலிகிராமின் இந்த புதிய மாற்றம், பயனாளர்கள் மற்றும் வணிகர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. இது டெலிகிராம் பயன்பாட்டை இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.

டெலிகிராம் தலைமை நிர்வாகி 99.999சதவீத டெலிகிராம் பயனர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடவில்லை என்றும், வெறும் 0.001சதவீதம் பயனர்கள் ஒட்டுமொத்த தளத்திற்கும் மோசமான படத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார். விமர்சனத்தின் ஒரு பகுதியிலிருந்து டெலிகிராம் ஒரு பாராட்டுக்குரியதாக இருக்கிறது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top