Close
நவம்பர் 1, 2024 5:29 காலை

நவம்பர் 1 முதல் போனுக்கு எஸ்எம்எஸ் (SMS) வராதாம்..! ஏன்..?

குறுஞ்செய்தி -கோப்பு படம்

உங்கள் மொபைல் போன்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் குறுஞ்செய்தி வருவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்து குறுஞ்செய்திகளையும் அடையாளம் காண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் வங்கிப்பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலர்ட்கள் போன்ற குறுஞ்செய்திகள் அனுப்புவதில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சிக்கல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக நிறுவனங்கள், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி உள்ளிட்டவைகளை அனுப்பும். இதில் அனுப்பப்படும் தகவலில் திரும்ப அழைக்கக்கூடிய எண், வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடிய எண்ணாக இல்லாவிட்டால், அந்த எஸ்.எம்.எஸ் தடை செய்யப்படும். அந்த குறுஞ்செய்தி வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு டெலிவரி ஆகாது.

டிராயின் இந்தப் புதிய விதிகளுக்கு தளர்வளிக்க வேண்டுமென்று, செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் வணிக நிறுவனங்கள் இந்த சிக்கலைச் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெலிவரி செய்யும் நிறுவனங்களால் சரியான காலத்தில் வாடிக்கையாளரை சென்றடைவதிலும் சிக்கல் ஏற்படலாம்.குறிப்பிட்ட காலத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடியாமல் போகலாம் என்ற கவலை நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த விதியை அமல்படுத்த மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் கூட்டாக கோரிக்கைகள் வைத்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top