Close
நவம்பர் 14, 2024 11:15 மணி

பிளாஸ்டிக் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானதா..? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

பிளாஸ்டிக் எல்பிஜி சிலிண்டர்கள் -கோப்பு படம்

நாம் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த கண்டுபிடிப்புகள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தொழில் எப்போதும் பாதுகாப்பு, பயன்பாட்டு வசதி மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில்கொள்வதற்கான வழிகளைத் தேடி உற்பத்தியைத் தொடங்குகிறது.

தொழில் என்று வந்தபின்னர் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வணிகம் மட்டும் வேறுபட்டதல்ல. எஃகு சிலிண்டர்களுக்குப் பதிலாக வேறு ஒன்றை பயன்படுத்தக்கூடாதா என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த பிளாஸ்டிக் எல்பிஜி சிலிண்டர்கள்.

வாயுவைச் சேமித்து விநியோகிக்க கலப்பு அழுத்த கலன்களைப் (CPVs) பயன்படுத்தினால், மேம்பட்ட பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் வசதி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு பயனாக இருக்கும்.

அதாவது விண்வெளிப் பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட ஒரு வகை பிளாஸ்டிக் தொழில்நுட்பம்தான் இந்த சிலிண்டர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி எந்த வகையில் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டில் ஓங்கி நிற்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கலப்பு எரிவாயு சிலிண்டர் என்றால் என்ன?

பிளாஸ்டிக் எல்பிஜி சிலிண்டர்கள், கலப்பு எல்பிஜி சிலிண்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கலப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்க இயந்திர பண்புகளைப் பெற்றிருக்கும். குறிப்பாக எடை, வலிமை, சேதமாவதில் இருந்து பாதுகாப்புத் தன்மை மற்றும் ஆற்றல் உறிஞ்சுதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவைகள் சிறந்த பயன்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளன.

கலப்பு அழுத்தக் கலன் உருவாக்கப் பயன்படுத்தப்படும் நுட்பம் ‘இழை முறுக்கு’ எனப்படும். இந்த கலப்பு அழுத்தக் கலன்கள் தொடக்கத்தில் விண்வெளிப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட நுட்பமாகும். இன்று அந்த விண்வெளி தொழில்நுட்பம் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோலியத் தொழிலில்களிலும் பயன்படுத்துவதற்கான முறையைக் கண்டறிந்துள்ளது.

ஒரு கூட்டு சிலிண்டர் என்பது மூன்று அடுக்கு சிலிண்டர் ஆகும்:

  • வெளிப்புற HDPE ஜாக்கெட்
  • ஒரு பாலிமர்-சுற்றப்பட்ட கண்ணாடியிழை கலவை அடுக்கு
  • ஒரு ப்ளோ-மோல்டட் ஹை-டென்சிட்டி பாலி எத்திலீன் (HDPE) இன்னர் லைனர்

கலப்பு சிலிண்டர்களின் நன்மைகள்

கலப்பு அழுத்தக் கலன்கள் இலகுரகமாக இருப்பதுடன் பாதுகாப்பானவை. மேலும் எல்பிஜி சிலிண்டர்களாகப் பயன்படுத்தும்போது, ​​அவை பின்வரும் அம்சங்கள் மற்றும் பயன்களைக் கொண்டுள்ளன:

இலகுரக, அதிகபட்ச எடை 5 கிலோ, 10 கிலோ மற்றும் 14 கிலோ.

LPG எரிவாயு அளவைத் துல்லியமாகக் கண்காணிக்க பயனர்களுக்கு உதவும் ஒரு ஒளிஊடுருவக்கூடிய பாடி அமைப்பைக் கொண்டுள்ளது. அது எரிவாயு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பயனாவதுடன் முன்கூட்டியே அடுத்த எரிவாயு சிலிண்டரை ஏற்பாடு செய்துக்கொள்ளவும் வசதியாகிறது.

அவை துருப்பிடிக்காதவை. தரையின் மேற்பரப்பில் கறைகள் ஏற்படுவதைக் குறைக்கிறது.

புதிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பால் பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமானது. மேலும் இன்றைய நவீன சமையலறைகளுக்கு மிகவும் பொருத்தமானது. அதற்கு வண்ணம் பூச வேண்டிய அவசியமில்லை.

100 சதவீத உத்தரவாதம்

மிகவும் குறிப்பிடத்தக்க நன்மை என்று குறிப்பிடும்போது இந்த கூட்டு சிலிண்டர்கள் 100சதவீதம் வெடிக்கவே வெடிக்காது என்பதுதான். எல்பிஜி எரிவாயு என்பது செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நம்பகமான மின்சார பயன்பாட்டுக்கு மாற்றான சக்தியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், எல்பிஜி வாயு மிகவும் வேகமாக எரியக்கூடிய பொருளாகும். இது அதிக அழுத்தம் உள்ள சூழலில் சேமிக்கப்படுகிறது.

பாதுகாப்பு உத்தரவாதம்

வாயு கசிவு ஏற்பட்டவுடன், ஒரு சிறிய பொரி மூலமாக ஒரு பேரழிவு மற்றும் அபாயகரமான வெடிப்பை விளைவிக்கலாம். அதேபோல், எரிவாயு உருளை கீழே விழுந்தாலோ அல்லது ஊடுருவினாலோ, உள்ளே இருக்கும் உயர் அழுத்த சூழலும் வெடிப்பை ஏற்படுத்தும். இது எரிவாயு சிலிண்டர்களின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு போன்ற சூழலில் ஆபத்தை அதிகரிக்கலாம்.

இருப்பினும், இந்த கலவை எரிவாயு சிலிண்டர் வடிவமைப்பு பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது :

சிறந்த ஆற்றல் உறிஞ்சுதல்:

இது கலப்பு சிலிண்டரை உருவாக்கும் லேமினேட் பொருட்களின் அடுக்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால் (ஸ்ரேடிஃபிகேஷன்) இது அதிக வாயு பயன்பாட்டைக் குறைத்து படிப்படியாக வெளியேற அனுமதிக்கிறது.

நிலையான சேமிப்பு:

பிளாஸ்டிக் கலப்பு சிலிண்டர்களை விட எஃகு எரிவாயு சிலிண்டர்கள் தீவிர வெப்பநிலைக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. ஏனென்றால் உலோகம் ஒரு சிறந்த வெப்ப கடத்தியாகும். அதாவது பிளாஸ்டிக் கலவை சிலிண்டர் எரிவாயு சேமிப்பிற்கு சாதகமான மற்றும் நிலையான சூழலை வழங்குகிறது.

இலகுரக வடிவமைப்பு:

பிளாஸ்டிக் கலப்பு சிலிண்டர்கள், எஃகு சிலிண்டர்களைவிட 50சதவீதம் வரை இலகுவானவை. போக்குவரத்து, கையாளுதல் மற்றும் சேமிப்பு போன்றவைகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top