இப்போது நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த முதலில் செல்போனில் சார்ஜ் இருக்கணும். அப்புறம் இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கணும். இவைகள் இல்லாமல் ஒரு போன் உருவாக்கமுடியுமா..?
முடியும் என்று செய்து காட்டியுள்ளார் எலான் மஸ்க் . ஆமாங்க அவரது டெஸ்லா ஸ்மார்ட்போன் இணையம் மற்றும் சார்ஜ் இல்லாமல் செயல்படும் என்கிறார்கள். ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோளுடன் இணைந்து செயல்படும் இந்த போன், சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா போன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் எலான் மஸ்க் என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே. அதேபோல புதிய ஸ்மார்ட்போனை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தப் போகிறார் என்பதே அவரது அடுத்த அதிரடி செய்தி.
அதில் உள்ள சிறப்பு அம்சமே அந்த போனுக்கு இன்டர்நெட் கனெக்ஷன் தேவையில்லை. அதன் பேட்டரிக்கு சார்ஜ் போடத் தேவை இல்லை என்றும் விளம்பரம் செய்கின்றனர். சார்ஜ் இல்லாமலும், இன்டர்நெட் இல்லாமலும் போன் எப்படி வேலை செய்யும் என்பது பலரும் வியப்பில் கேட்கும் கேள்வி.
எலான் மஸ்க்
டெஸ்லா ஸ்மார்ட்போன் பற்றி எலான் மஸ்க் அல்லது டெஸ்லா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. டெஸ்லா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் தொழிலில் இறங்கி இருப்பதாக ஒரு வதந்தி உள்ளது. ஆனால் இதுவரை டெஸ்லாவிடமிருந்து ஸ்மார்ட் போன்கள் வரவில்லை.
முன்னதாக, ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் தொழில் எதுவும் தன்னிடம் இல்லை என்று மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், டெஸ்லா Pi மூன்று அசாதாரண அம்சங்களுடன் வரவுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
Tesla Model Pi
போனுக்கு இன்டர்நெட் தேவையில்லை. ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோளுடன் நேரடியாகச் செயல்படும். சோலார் சிஸ்டம் மூலம் ஆட்டோ சார்ஜ் செய்வது என்ற முழுப் பிரசாரம் செய்வதும் தெரியவந்தது. டெஸ்லா ஸ்மார்ட்போனை வெளியிடுவதாக கடந்த காலங்களில் பல வதந்திகள் வந்தன. அவற்றில் முக்கியமானது டெஸ்லா போனை மின்சாரம் இல்லாமல் சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும் திறன் ஆகும். டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே சோலார் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி வருகிறது.
Tesla
மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வழங்கிய ஸ்டார் லிங்க், மாடல் போனில் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு பரந்த பிராண்ட் வேகமான செயற்கைக்கோள் அடிப்படையிலானது. 5ஜி நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் இந்த ஃபோன் கவரேஜ் உள்ளது. குறிப்பாக ஸ்டார் லிங் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டதாகத் தெரிகிறது. மேலே உள்ள மாடலில் மூளை-இயந்திர-இடைமுகம் (பிஎம்ஐ) சில்லுகள் தொலைபேசியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நமது எண்ணங்களால் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும்.
Tesla New Smart Phone
குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் கூட தொலைபேசி தொழில்நுட்பம் உள்ளது. இந்த போனின் விலை சுமார் 100 டாலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எலான் மஸ்க் மொபைல் போன் உற்பத்தியில் நிச்சயம் இறங்குவார், அது மொபைல் சந்தையில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.