Close
டிசம்பர் 12, 2024 7:56 மணி

ஆள் துவைக்கும் இயந்திரம்..! ஜப்பான் அசத்தல் கண்டுபிடிப்பு..!

ஆள் துவைக்கும் இயந்திரம்

துணி துவைக்கும் வாஷிங் மெஷின் நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா மனுஷனை துவைக்கும் மெஷின் வந்துடிச்சுங்க. அடடே..எங்களை எங்க வைஃப்ங்க துவைச்சு எடுக்கிறது போதாதா..? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

இந்த இயந்திரத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்று உருவாக்கி அதை எல்லோருக்கும் டெமோ காட்டி வருகிறது. அது வேற ஒன்னும் இல்லீங்க நம்மலை குளிச்சு விடும் மெஷினுங்க.

அந்த இயந்திரத்தில் ஏறி படுத்தால் போதும். 15 நிமிஷத்தில் நம்மை சுத்தப்படுத்தி விடும். ஜப்பானிய நிறுவனமான சயின்ஸ் கோ, இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து, அதற்கு ‘மிரைய் நிங்கன் சென்டாகுக்’ என்ற பெயரையும் சூட்டியுள்ளது.

அந்த இயந்திரம் குறித்து அந்த நிறுவனம் என்ன சொல்லுதுன்னா…:-

தரமான சம்பவம் போல தரமான தண்ணீர் பீய்ச்சும் ஜெட், பூ மாதிரி வீசியடிக்க நுண்ணிய காற்றுக் குமிழ்கள் போன்ற அமைப்புடன் கூடிய அந்த அமைப்பு ஸ்பா போன்ற அனுபவத்தை அந்த இயந்திரம் தருமாம். இதை நம்மை ஒருமுறை பயன்படுத்திட்டா அமைதியான அனுபவம் கிடைக்கும் என்கிறார்கள்.

வெதுவெதுப்பான தண்ணீர் பாதியளவு நிரம்பிய ஒரு வெளிப்படையான ஜெட் விமானம் போன்ற அமைப்புக்குள் நுழையும் போது அதில் இருந்து வரும் அதிவேகமான நீரில் நுண்ணிய குமிழ்கள் உங்கள் உடல் மீது பரவி உடலில் உள்ள அசுத்துங்களை கழுவி எடுக்கும்.

ஏ.ஐ. அதாங்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் துவைக்கப்படுபவர் உடல் அறிகுறிகள் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் தண்ணீர் பீய்ச்சும் பம்ப்பின் அழுத்தம், தண்ணீரின் வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது.

உதாரணமாக உங்கள் உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆளுக்கு இருப்பதாக செயற்கை நுண்ணறிவு கண்டறிந்தால் அந்த இடத்தில் கூடுதல் வெப்பமுடன் அதிக அழுத்தத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்.

நவீன முறையில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாக உள்ளது. அந்தக் கண்காட்சியில் 1,000 பேர் பங்கேற்று அதை நேரடியாக அனுபவிக்க இருக்கிறார்களாம்.

அதற்கான சோதனையை தீவிரமாக செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது வாடிக்கையாளர் மத்தியில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம் என்கிறார்கள் நிறுவனத்தினர்.

இந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top