Close
ஜனவரி 8, 2025 8:50 காலை

ஒண்ணே முக்கால் கோடி ரூபாய் பஸ்..!

ரூ.1.75 கோடி பஸ்

நீங்கள் எங்கேயாவது ஸ்விட்ச் என்கிற பெயரில் பேருந்துகள் ஓடுவதைப் பார்த்திருக்கலாம். ஹெவி கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் செக்மென்ட்டின் ஜாம்பவான் நிறுவனமான அசோக் லேலாண்டின் சப்சிடரி நிறுவனம் தான் இந்த ஸ்விட்ச் மொபிலிட்டி எனும் நிறுவனம்.

அசோக் லேலாண்டில் இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பொறுப்பு இந்த ஸ்விட்ச்சிடம் தான் இருக்கிறது. ஏற்கெனவே அசோக் லேலாண்டின் தோஸ்த் எனும் லைட் வெயிட் கமர்ஷியல் வாகனத்தின் எலெக்ட்ரிக் வெர்ஷனான IeV3, IeV4 எனும் வாகனங்களை லாஞ்ச் செய்திருந்தது ஸ்விட்ச்.

இப்போது டெல்லியில் ஒரு சூப்பரான தாழ்தளப் பேருந்து ஒன்றை லாஞ்ச் செய்திருந்தது ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம். இதன் பெயர் EiV12. இதுவும் ஒரு எலெக்ட்ரிக் பேருந்து தான். ஸ்விட்ச் தயாரிக்கும் எல்லாமே எலெக்ட்ரிக் மட்டுமில்லை; அனைத்துமே நெக்ஸ்ட் ஜென் பஸ்கள்தான்.

பார்ப்பதற்கே அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஜொலித்தது அந்த பஸ். 12,000 மிமீ என்றால் சும்மாவா? இரண்டு இனோவா ஹைக்ராஸ் காரின் நீளத்தைவிட மிகப் பெரியது. இதில் 39 பேர் மிக சொகுசாகப் பயணிக்கலாம்.

இது டிரைவரும், வீல்சேரும் இல்லாமல். சீட்கள் செம கம்ஃபர்ட்டாகவே இருக்கிறது. ஆனால், இதை நீண்ட தூரப் பயணங்களுக்காக இதை ரெடி செய்யவில்லையோ ஸ்விட்ச்? இதன் அப்ளிகேஷன்கள் – அதாவது பயன்பாடு என்று பார்த்தால் – இன்ட்ராசிட்டிப் பயன்பாடு தான் அதிகம்.

Tarmac என்று சொல்லக்கூடிய ரோடுகள், பார்க்கிங் ஏரியாக்கள், ஏர்போர்ட் ரன்வேக்கள், கம்பெனி கம்யூட்டிங் போன்ற பயன்பாடுகளுக்கும் இது ஏற்ற வகையில் இருக்கிறது. இதன் அகலம் 2,550 மிமீ. நடுவில் நடந்து கொள்ளும் அளவுக்கு இடவசதி. வீல்பேஸ் 6,320 மிமீ அளவுக்கு இருக்கிறது.

தாழ்தளப் பேருந்து (Low Floor Bus) என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது. சில பஸ்களில் ஏறுவதற்குக் குதிரையேற்றம் எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்த EiV12-ல் அப்படி இல்லை. சட்டுனு ஒரு காலை வைத்து ஏறிவிட முடிகிறது. இந்தப் பேருந்தில் இன்னொரு ஸ்பெஷல் – செக்மென்ட்டில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் (Ingress – Egress) சூப்பரான ஒரு வசதி இருக்கிறது.

டிரைவர் டேஷ்போர்டில் ஒரு பட்டனை ப்ரெஸ் செய்தால் போதும் – சட்டென விமானத்தில் இருந்து இறங்குவதுபோல் ஒரு ரேம்ப் ஒன்று இறங்குகிறது. அதன் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிளை எளிதில் ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

இதில் உள்ளது, பெர்மனன்ட் மேக்னெட் சிங்க்ரனைஸ்டு AC எலெக்ட்ரிக் மோட்டார். இதன் பவர் 235kW. பேட்டரி பற்றி விசாரித்தேன். அட்வான்ஸ்டு லித்தியம் அயன் பேட்டரி என்றார்கள். இதன் டயர்களின் அளவு 295/80 R22.5 என்கிற அளவில் இருந்தது.

மாற்றுத் திறனாளிகளின் Ingress வசதி போல் இன்னொரு சிறப்பு இதில் இருக்கிறது. அது இதன் ஏர் சஸ்பென்ஷன். இதற்கும் டிரைவர் டேஷ்போர்டில் ஒரு பட்டன் உள்ளது. அதை அழுத்தினால் அத்தனை பெரிய பேருந்தின் சஸ்பென்ஷன் ஜிவ்வென ஏறி இறங்குவது சூப்பராக இருக்கிறது. இதை Kneeling Mechanism என்கிறார்கள். ஆனால் பின் பக்கம் டிரம் பிரேக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள். முன் பக்கம் டிஸ்க்.

ரேஞ்ச் பற்றிக் கேட்டால், இது சிங்கிள் சார்ஜுக்கு 312 கிமீ என்கிறார்கள். அப்படியென்றால், ரியல் டைமில் 275 கிமீ வருமா? எல்லாம் ஓகே! இதன் விலை? அது அப்படி இப்படினு ஒரு 1.75 கோடி ரூபாய் வந்துவிடும் என்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top