Close
செப்டம்பர் 20, 2024 6:43 காலை

ஜவுளித்துறை சார்பில் நெசவு கணக்கீடு பயிற்சி: ஜூலை 11-ல் தொடக்கம்

ஈரோடு

ஈரோட்டில் வீவிங் கால்குலேசன் பயிற்சி தொடக்கம்

இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில்“நெசவு கணக்கீடு”  (வீவிங் கால்குலேஷன்) பயிற்சி வகுப்புகளுக் கான சேர்க்கை  வரும் 11 -ஆம் தேதி  தொடங்குகிறது.

ஈரோட்டில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் விசைத்தறி சேவை மையத்தில் அடிப்படை விசைத்தறி பயிற்சி அளிப்பதற்கு தேவையான சாதா விசைத்தறிகள், டாபி மற்றும் டெர்ரி தறிகள் நிறுவப்பட்டுள்ளன.

ஜவுளித்துறையில் திறமை வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கி ஜவுளித்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், எண்: 2/118 A, ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, ஈரோடு – 638009 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் இந்த விசைத்தறி சேவை மையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வருகிற  18.07.2022 (திங்கள்கிழமை)  அன்று துவங்கவுள்ள ஐந்து நாள் பயிற்சி வகுப்பில், நூல் குறியீட்டு எண் முறைகள் (கவுண்ட்), நெசவு கணக்கீடுகள், உற்பத்தி செலவு கணக்கீடுகள் உள்ளிட்டவைகள்  பயிற்சி அளிக்கப்பட  உள்ளன. இதில் ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெற்று பயன் அடையலாம். இப்பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை 11.07.2022 முதல் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0424-2271357/ 9029676479 / 6380313139 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று விசைத்தறி சேவை மையம் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top