புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்புதிய திறன் மின்மாற்றியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்,மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், புதிதாக நிறுவப்பட்ட கூடுதல் திறன் மின்மாற்றியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்ச ரின் சீரிய முயற்சியால், தமிழக மின்வாரியத்தின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில், மின் நுகர்வோருக்கு சீரான மின்சாரம் வழங்க ஏதுவாகவும், குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்யும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் ஏற்பட்டுவரும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் மின் தேவை களை கருத்தில்கொண்டும், எரிசக்தி இழப்புகளை குறைக்க வும், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மின் பகிர் மான வட்டம் 110 /33-22 கிவோ சிப்காட் துணைமின் நிலையத் தில் உள்ள 110/33 கிவோ மின்னழுத்த விகிதாச்சாரத்தில் திறன் மின்மாற்றியின் திறனை 1 x 16 எம்விஏ திறனிலிருந்து 2×16 எம்விஏ திறன் மின்மாற்றியாக திறன் கூட்ட ரூ.2.15 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய திறன் மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது.
இத்துணைமின் நிலையத்தால் மின் விநியோகம் பெறும், அன்னவாசல், கீழக்குறிச்சி, முக்கணாமலைப்பட்டி, காலாடி பட்டி, ஆரியூர், மாங்குடி, பரம்பூர், அண்ணாபண்ணை, வயலோகம், குடுமியான்மலை, காரையூர், மேலத்தானியம், அரசமலை, ஒலியமங்கலம், மறவாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 35,500 மின் நுகர்வோர் கள் பயன்பெறுவார்கள்.
இதன்மூலம் இந்த புதிய திறன் மின்மாற்றி இன்றையதினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மேற்பார்வை பொறியாளர்கள் த.சேகர், எம்.வீரமுத்து, செயற் பொறியாளர்கள் டி.அசோக்குமார், எம்.முருகேசன், எஸ்.ராமசாமி, எஸ். கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.