Close
நவம்பர் 22, 2024 8:35 காலை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் டீ கடையில் வேலை தொழிலாளி காயமடைந்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும்  நடைமேடைப் பகுதியில்  கடைகள்  உள்ளன.  இதில், மணி உடையார் என்பவர்  நடத்தி வரும் டீக்கடையில்  சுகுமார் என்பவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை டீக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மேற்கூரை கான்கிரீட் தகடு  பெயர்ந்து விழுந்தது.

இதில்  கீழே நின்று கொண்டிருந்த சுகுமாரன் தலையில் விழுந்து  அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.  மேலும் கடையில் உள்ள  பொருட்களும் சேதம் அடைந்தன.

அருகிலிருந்தோர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து  சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகுமாரை அழைத்துச் சென்றனர்.

இன்நிலையில் இந்தப் பகுதியில் இதுபோன்று அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விடுவதாகவும் அதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் டீக்கடை மேற்கூரை பேருந்து விழுந்து டீ மாஸ்டர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில் நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு உள்ள வியாபாரிகள் கூறுகையில்,  இந்த பேருந்து நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விடுவதாக தெரிவித்தனர் அப்போது வியாபாரிகளிடம் பேசிய நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், பேருந்து நிலையத்தை   விரைவில் மறு சீரமைக்க பணி செய்து விடுவோம் என உறுதி அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top