புதுக்கோட்டையில் அகில பாரதிய நுகர்வோர் (க்ராஹக் பஞ்சாயத்து) அமைப்பின் மாதாந்திர கூட்டம் 28-08-2022 ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில பொறுப்பாளர் (நுகர்வோர் விவகாரங்கள்) செல்.கனகராஜ் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் வே.காளிமுத்து முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு பொறுப்பாளர் வி.புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கோரிக்கைகள் நிறைவேறுவது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நாளது தேதி வரையில் மாவட்ட நிர்வாகத்தில் நடவடிக்கை இல்லை இது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சீனிவாசன், சரவணன் நடராஜன், மலைச்சாமி, ரவிச்சந்திரன், நாடி முத்து செல்வம், பழனியப்பன், மேனாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணுச்சாமி, மற்றும் மூத்த வழக்கறிஞர் அறந்தை அண்ணாதுரை , வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திரைப்பட இயக்குநர் ஷாஜகான் நன்றி கூறினார்