Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம்,  திருவேதிகுடி ஊராட்சிகீழ நெடார் கிராமத்தில்; நடைபெற்றுவரும் தமிழர் மரபுவழி வேளாண்மை மரபு விதைவிற்பனை மற்றும் கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்டபசுமை குழு,கவின்மிகுதஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினைமாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

பின்னர் மாவட்டஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்டநிர்வாகம் மாவட் பசுமை குழு, கவின்மிகு நஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் தடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுவரைகல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்லமுறையில் பராமரித்துவளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்டபொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளுக்கும் தங்களைமுழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்றார் ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இதைத் தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சர்  கும்பகோணம் அரசு மாவட்டதலைமை மருத்துவமனையில் ரூ. 1.35 கோடிமதிப்பீட்டில் காணொளிகாட்சி வாயிலாக  ஆர்டிபிசிஆர்  ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்ததை மாவட்டஆட்சியர்  நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம்,  திருவேதிகுடி ஊராட்சிகீழ நெடார் கிராமத்தில்; நடைபெற்றுவரும் தமிழர் மரபுவழி வேளாண்மை மரபு விதைவிற்பனை மற்றும் கண்காட்சியினை பார்வையிட்டு, வேதாரண்யம் குறவபுலத்தை சேர்ந்த பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் சிவரஞ்சனிசரவணகுமார், தஞ்சாவூர் அருங்காட்சிய கத்திற்க்கு பாரம்பரிய விதை நெல் வழங்கியதை பாராட்டி மாவட்ட ஆட்சியர்  கேடயம் வழங்கினார்.

பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சி பழைய மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்டஆட்சியர் நேரில் பார்வை யிட்டுஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்  க.அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன்,  துணை மேயர் சு.ப.தமிழழகன்.

இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் குடும்பநலம்) திலகம், வேளாண் உ ழவர் நலத்துறை இணை இயக்குனர் ஆ.ஜஸ்டின், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், மற்றும் சிட்கோ நிர்வாகம் மற்றும் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழில் நலச் சங்கம் மற்றும் பலர் கலந்துகொடனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top