Close
நவம்பர் 22, 2024 10:24 காலை

பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்த பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற பேரிடர் மீட்டு பயிற்சியை பார்வையிட்ட ஆட்சியர் கவிதா ராமுய

மத்திய அரசின் சார்பில் பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி செய்வது குறித்து  செயல்முறை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது..

மத்திய அரசின் பேரிடர் கால நண்பர்கள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நாட்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருமயம் தாலுகா, வன்னியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 21 -ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், நெய்வாசல் பட்டி பெரிய கண்மாயில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நபர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி வழங்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு அவர்களைப் பாராட்டி  மரக்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் முருகேசன், திருமயம் வட்டாட்சியர் பிரவீணா மேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top