Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

பெண்களுக்கான இலவசத் திட்டத்தின் கீழ் 3.53 கோடிக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: புதுகை மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

பெண்களுக்கான இலவச பேருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்திட வழிவகை செய்யும் வகையில் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டார்கள்.

இதேபோன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 136 நகர் பேருந்துகள்; 337 வழித்தடங் களி லும், 250 புறநகர் பேருந்துகள் 227 வழிதடங்களிலும், 34 மாற்றுப்பேருந்துகளும் என மொத்தம் 420 பேருந்துகள் 564 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஒரு நாளைக்கு 2.65 லட்சம் பயணிகள் சராசரியாக பயணம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர்  அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 398 மாற்றுத்திறனாளிகள், 15 மாற்றுத்திற னாளி உதவியாளர்கள், 20 திருநங்கைகள் என சராசரியாக 86,340 கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 3.53 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையும் பேருந்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தினந்தோறும் கூலி வேலை, பணிநிமித்த மாக வெளியூர் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்திட்டம் பேருதவியாக உள்ளதால் பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரிடம் கனிவுடனும், பேருந்து நிறுத்தத்தில் எத்தனை பெண்கள் காத்திருந்தாலும் அவர்களை நிறுத்தி பேருந்தில் ஏற்றவும் பேருந்து நடத்துனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு  புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் அனைவரும் நன்றியினை தெரிவித்துகொண்டுள்ளதாக   மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top