Close
செப்டம்பர் 20, 2024 2:41 காலை

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றியைதொடக்கி வைத்த அமைச்ர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  (12.10.2022) வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில்  ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட் டுள்ளது.

புதிய மின்மாற்றிகளானது, அறந்தாங்கி ஒன்றியத்தில், அழியாநிலை ஊராட்சி, வாழக்குடியிருப்பு பகுதியில் ரூ.7.56 இலட்சம் மதிப்பிலான 63கேவிஏ திறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு 4 விவசாயம் சார்;ந்த மின் இணைப்பிற்கும், 120 வீடுகளுக்கும், பஞ்சுமில் குடியிருப்பு பகுதியில் ரூ.3.71 இலட்சம் மதிப்பிலான 25 கேவிஏதிறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு ஒரு உயர்நிலை நீர் தொட்டி மின் இணைப்பிற்கும், 40 வீடுகளுக்கும், குரும்பூரில் ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான 100 கேவிஏ  திறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு 3 விவசாயம் சார்ந்த மின் இணைப்பிற்கும், 200 வீடுகளுக்கும்.

திருவரங்குளம் ஒன்றியத்தில், வடகாடு ஊராட்சி, பரமன்பட்டி பகுதியில் ரூ.7.75 இலட்சம் மதிப்பிலான 63 கேவிஏ திறனுடைய புதிய மின்மாற்றி மற்றும் ரூ.5.86 இலட்சம் மதிப்பிலான 63 கேவிஏ  திறனுடைய புதிய மின்மாற்றிகள் கொண்டு 10 விவசாயம் சார்;ந்த மின் இணைப்பிற்கும், 30 வீடுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கக் கூடிய 5 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டுக்கு   இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டிகளானது, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 124 மாணவ, மாணவிகளுக்கும், வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 140 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 35 மாணவ, மாணவி களுக்கும் என ஆகமொத்தம் 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம், மின்சாரவாரிய செயற்பொறியாளர்(பொ) சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top