அரிமளம் மெர்க்குரி மழலையர் பள்ளியில் ஒலி மாசற்ற தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் மெர்க்குரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளியில் தீபாவளி பண்டிகை விழா ஒலி மாசற்ற விழாவாக கொண்டாடப்பட்டது .
விழாவில் மாணவர்கள் ஒலிமாசு குறைவாகவும் மற்றும் நச்சுத்தன்மை குறைவாக உள்ள பசுமை பட்டாசுகளை தீபாவளி கொண்டாட்டத்தில் பயன்படுத்த உறுதிமொழியை முதல்வர் முத்துலெட்சுமி வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது விபத்தினை தடுக்க பட்டாசுகளை பயன்படுத்தும் முறைகள் பற்றி பள்ளியின் தாளாளர் ரமணன் விரிவாகக் பேசினார். பின்னர் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் தீபாவளி இனிப்பு களையும் மஞ்சள்பையுடன் சேர்த்து மாணவர்களுக்கு வழங்கினார்.பள்ளிஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தனர் . விழா ஏற்பாடுகளை முதல்வர் முத்துலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.