Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

புதுகை அரசு உயர்துவக்கப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு செயல் விளக்கம்

புதுக்கோட்டை

புதுகை சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அரசு உயர் துவக்கப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளி இணைந்து மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு  செயல் விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் என்.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.ரெத்தினம், சங்க துணைத் தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான  எஸ்ஏ.எஸ்.சேட் என்ற அப்துல் ரகுமான், நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, ஜெ.ராஜா முகமது, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாரிக்கண்ணு,.

சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் ஏ.சுப்பையா, செய்தி தொடர்பாளர் கோ.கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா பள்ளி புரவலராக சேர்ந்தார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்கச் செயலாளர் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு வரவேற்றார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மற்றும் முனைவர் கோ.கண்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், பரமசிவம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மொத்தம் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி அன்று பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிப்பது என்று செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top